கேக்கை தின்றவர் யார்? புதிரை கண்டுபிடித்து ராணிக்கு உதவுங்கள்

உங்கள் மூளையை தயார்படுத்தி, இந்த புதிரைக் கண்டுபிடியுங்கள்.நீங்கள் அசத்துவீர்கள் என்று நம்புகிறோம்!

வாழ்த்துகள்!

மூளைக்கு வேலை கொடுக்கும் பிபிசியின் புதிர் தொடரின் ஏழாம் பகுதி இது.

புதிர் - 7

நாட்டை ஆளும் ராணி ஒருவரின் விருப்பமான கேக்கை யாரோ தின்று விட்டனர்.

கேக்கை உண்ட ஊழியர்கள் பொய் சொல்வார்கள் என்றும், அதை உண்ணாதவர்கள் உண்மை பேசுவார்கள் என்றும் அவர் நம்பினார்.

எனவே தனது ஊழியர்கள் ஐந்து பேரிடம் அதைப் பற்றி விசாரித்தார் ராணி.

ஊழியர் 1: `எங்களில் ஒருவர்தான் தின்றார்.`

ஊழியர் 2: `எங்களில் இருவர் தின்றனர்.`

ஊழியர் 3: `எங்களில் மூவர்தான் தின்றனர்.`

ஊழியர் 4: `எங்களில் நால்வர் அந்த கேக்கை தின்றனர்.`

ஊழியர் 5: `ஐந்து பேரும் கேக்கை தின்றனர்.`

இதில் எத்தனை ஊழியர்கள் நேர்மையானவர்கள்? யார் சொல்வது உண்மையாக இருக்கும்?

விடை:

நான்காம் ஊழியர் சொல்வதுதான் உண்மை.

இந்த புதிருக்கு நீங்கள் வேறுமுறையில் விடையை கண்டுபிடித்திருக்கலாம் ஆனால் இதோ விடையை விளக்கும் ஒரு முறை.

அனைத்து ஊழியர்களும் ஒவ்வொரு பதிலை சொல்வதால் அதில் ஒன்று மட்டுமே உண்மையானதாக இருக்க முடியும்.

ஒருவர் உண்மை பேசுவதானால் மற்ற நால்வரும் பொய் சொல்கிறார்கள் என்று அர்த்தம்; எனவே நால்வர் அந்த கேக்கை உண்டதாக அர்த்தம்.

எனவே நான்காம் ஊழியர்தான் உண்மை பேசுகிறார்.

ஐவரும் கேக்கை உண்டார்கள் என்றால் ஐந்து ஊழியர்களும் பொய் சொல்கிறார்கள் என்று அர்த்தம் எனவே ஐந்தாம் நபர் உண்மை பேசுகிறார் என்று சொல்ல முடியாது.

எனவே நான்காம் ஊழியர்தான் உண்மை பேசுகிறார்.

இந்த புதிர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் என்ஆர்ஐசிஎச் திட்டத்திலிருந்து எடுக்கப்பட்டது.

முந்தைய புதிர்கள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :