விஞ்ஞானி என நிரூபிக்க ரகசிய குறியீட்டை கண்டுபிடியுங்கள்! புதிர் - 8

  • 28 ஆகஸ்ட் 2017

உங்கள் மூளையை தயார்படுத்தி, இந்த புதிரைக் கண்டுபிடியுங்கள்.நீங்கள் அசத்துவீர்கள் என்று நம்புகிறோம்!

வாழ்த்துக்கள்!

படத்தின் காப்புரிமை Getty Images

மூளைக்கு வேலை கொடுக்கும் பிபிசியின் புதிர் தொடரின் எட்டாம் பகுதி இது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
உங்கள் மூளைக்கு பயிற்சி கொடுங்கள்

புதிர் - 8

நீங்கள் எதிரி நாட்டின் ஏவுகணை தளத்தின் வாயிலில் நிற்கின்றீர்கள். உங்களுக்கு உள்ளே போக வேண்டும் ஆனால் அதற்கான ரகசிய குறியீடு உங்களுக்கு தெரியாது எனவே நீங்கள் வாயிலில் நின்று, உள்ளே செல்பவர்களை கவனித்துக் கொண்டு நிற்கின்றீர்கள்.

முதல் விஞ்ஞானி வருகிறார். நுழைவு வாயிலில் இருந்த பாதுகாவலர் பன்னிரண்டு( twelve) என்கிறார், அதற்கு அவர் ஆறு (six) என்று பதில் சொல்கிறார். பின் அவர் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்.

இரண்டாம் விஞ்ஞானி வருகிறார். காவலர் இந்த முறை ஆறு (six) என்கிறார் அதற்கு விஞ்ஞானி மூன்று (three) என்கிறார். பின் அவரும் அனுமதிக்கப்படுகிறார்.

இப்போது உங்களுக்கு விடை தெரிந்துவிட்டது என எண்ணுகிறீர்கள்.

எனவே நீங்கள் வாயிற் கதவின் அருகே சென்றவுடன் காவலாளி ஒன்பது (nine) என்று கேட்கிறார் ஆனால் நீங்கள் நான்கரை (four and half) என்று சொல்லியவுடன் காவலாளி அலாரத்தை அமுக்கி உங்களை மாட்டி விடுகிறார்.

ஏன் என்று புரியவில்லையா?!!

விடை:

நீங்கள் நான்கு (four) என்று பதில் சொல்லியிருக்க வேண்டும். அதாவது கேள்வியில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையைதான் நீங்கள் கூற வேண்டும்.

இந்த புதிர், லாரென் சைல்ட் என்பவரின் நாவலில் இருந்து எடுக்கப்பட்டது.

முந்தைய புதிர்கள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்