பிபிசி தமிழில் இன்று வெளியான முக்கிய செய்திகள்

பிபிசி தமிழில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில் இந்தியாவின் பி. வி. சிந்துவை வென்று ஜப்பான் வீராங்கனை நசோமி ஒக்குஹாரா தங்கப்பதக்கம் பெற்றார்.

பாலியல் வல்லுறவு வழக்கில் "தேரா சச்சா செளதா" அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என சி.பி.ஐ. நீதிமன்றத்தால் தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவருக்கான தண்டனை விவரங்கள் நாளை (திங்கள்கிழமை) அறிவிக்கப்பட உள்ளது. நாளை மீண்டும் வன்முறை நிகழாமல் தடுக்க ஹரியானா அரசு, கீழ்கண்ட 7 முன்னேற்பாடுகளைச் செய்துள்ளது.

அதிமுகவின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அணியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகக் கூறியதை அடுத்து, பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு உத்தரவிடவேண்டும் என கோரிக்கை விடுத்து, திமுக, காங்கிரஸ் மற்றும் இந்திய முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்தவர்கள், இன்று (ஞாயிறுக் கிழமை) ஆளுநர் வித்யா சாகர் ராவிடம் கடிதம் ஒன்றை அளித்துள்ளனர்.

பாலியல் வல்லுறவு வழக்கில் "தேரா சச்சா செளதா" அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதையடுத்து, ஹரியானாவின் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. அம் மாவட்டத்தின் சிர்சா நகரிலிருந்து செய்திகளை வழங்குகிறார் பிபிசி செய்தியாளர் ஜஸ்டின் ரெளலட்.

இலங்கையில் இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல்கள் மீண்டும் தலைதூக்க தொடங்கியிருப்பதாக முஸ்லீம் சமூகத்தினரால் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையால் ஏற்பட்ட குழப்பம், அதிர்ச்சி அவற்றின் நீங்காத விளைவுகளை அலசும் பிபிசியின் ஆய்வுத் தொடர்.

பறக்க முடியாத ராட்சத பறவையான டோடோ அழிந்துபோகும் நிலைக்கு தள்ளப்பட்ட நூற்றுக்காணக்கான ஆண்டுகளுக்குப் பின்னர், அதுபற்றி கிடைத்த துப்புகளை எல்லாம் விஞ்ஞானிகள் ஒன்றாக இணைத்து ஆய்வு நடத்தி பல உண்மைகளைக் கண்டறிந்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :