பிபிசி தமிழில் இன்று... மாலை 6 மணி வரை

பிபிசி தமிழில் இன்று (திங்கள்கிழமை) மாலை 6 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை Getty Images

பாலியல் வல்லுறவு வழக்கில் ஹரியானா சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையை இந்திய நீதிமன்றம் இன்று விதித்துள்ளது.

இந்த செய்தியை படிக்க: பாலியல் வல்லுறவு வழக்கில் ஹரியானா சாமியாருக்கு 10 ஆண்டுகள் சிறை

படத்தின் காப்புரிமை AFP

கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்த பிரச்சனைக்குரிய டோக்லாம் பகுதியில் இருந்து இரு நாட்டு படைகளையும் பரஸ்பரம் திரும்பப் பெற இந்தியாவும் சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளன.

இந்த செய்தியை படிக்க: டோக்லாம் பகுதியில் படைகளை வாபஸ் பெற இந்தியா - சீனா ஒப்புதல்

படத்தின் காப்புரிமை HONEYPREETINSAN.ME

"தேரா சச்சா செளதா" அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளி என ஹரியானா நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.

இந்த செய்தியை படிக்க: ஹரியானா சாமியாருடன் உள்ள பெண் யார்?

டிடிவி தினகரன் வெளியிடும் நியமன அறிவிப்புகள், பதவி நீக்க அறிவிப்புகள் செல்லாது என்றும், விரைவில் பொதுக் குழு மற்றும் செயற்குழுவை கூட்டவிருப்பதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க பிரிவு அறிவித்திருக்கிறது.

இந்த செய்தியை படிக்க: 'நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டிவி மீட்கப்படும்'

படத்தின் காப்புரிமை Reuters

டெக்சாஸ் மாகாணத்தில் கன மழையுடன் ஹார்வி புயல் புரட்டி எடுத்து வரும் நிலையில், ஹுஸ்டன் நகரையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கிய சுமார் 2000 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை படிக்க: ஹார்வி புயல்: ஹூஸ்டனில் வெள்ளப்பேரழிவில் இருந்து 2000 பேர் மீட்பு

படத்தின் காப்புரிமை Getty Images

மூளைக்கு வேலை கொடுக்கும் பிபிசியின் புதிர் தொடரின் எட்டாம் பகுதி இது.

புதிரை பார்க்க: விஞ்ஞானி என நிரூபிக்க ரகசிய குறியீட்டை கண்டுபிடியுங்கள்! புதிர் - 8

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சிவப்பு நிற பகுதியிலிருந்து எடின்பரோ வரை

மும்பை சிவப்பு விளக்கு பகுதியின் பாலியல் தொழிலாளர்களின் மகள்களாக வளரும் இவர்கள் தங்கள் அனுபவங்களை நாடகமாக வடிவமைத்து எடின்பரோ திருவிழாவில் அரங்கேற்ற வந்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்