பிபிசி தமிழில் இன்று வெளியான முக்கிய செய்திகள்

  • 29 ஆகஸ்ட் 2017

பிபிசி தமிழில் இன்று (செய்வாய்க்கிழமை) வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

இலங்கையின் மூத்த முஸ்லிம் அரசியல் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எச்.எம். அஸ்வர் செவ்வாய்க்கிழமை இரவு கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் காலமானார். அவருக்கு வயது 80.

செய்தியை பார்க்க: இலங்கை : முன்னாள் அமைச்சர் அஸ்வர் மறைவு

இலங்கையில் அனைத்து மாகாண சபைகளின் தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியல் யாப்பின் 20-வது திருத்தத்திற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக மாகாண சபைகளில் குழப்பநிலை காணப்படுகின்றது.

செய்தியை படிக்க: இலங்கை: 20-வது திருத்த சட்ட மசோதாவை நிறைவேற்றுவதில் குழப்பம்

மும்பை நகர் முழுவதும் பெய்துவரும் கனமழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையின் முக்கிய போக்குவரத்து அம்சமாக கருதப்படும் உள்ளூர் ரயில்கள் நிறுப்பத்தப்பட்டுள்ளன. சாலைகளில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலில் கார்கள் சிக்கி நிற்கின்றன.

செய்தியை பார்க்க: மும்பையில் 12 ஆண்டுகளில் இல்லாத கனமழை (புகைப்படத் தொகுப்பு)

படத்தின் காப்புரிமை AFP

செவ்வாய்க்கிழமை அதிகாலையில், வட கொரியா ஏவிய ஏவுகணையொன்று வடக்கு ஜப்பான் மீது பறந்து இறுதியில் கடலில் விழுந்தது. இது குறித்து கருத்து தெரிவித்த பல பாதுகாப்பு வல்லுநர்கள், இதுவரை ஜப்பான் பிராந்தியம் மீது வடகொரியா ஏவியுள்ள ராக்கெட்கள் செயற்கைகோள்களை தாங்கிச் சென்றதாக அந்நாடு குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர்.

செய்தியை படிக்க:ஜப்பானை அச்சுறுத்துகிறதா வட கொரியா?

படத்தின் காப்புரிமை SHURIAH NIAZI

மத்தியபிரதேச மாநிலம் சாஹர் மாவட்டம் சிதெளரா கிராமம். வெள்ளிக்கிழமையன்று அங்குள்ள உயர்நிலைப்பள்ளிக்கு அருகில் ஒரு வெடிகுண்டு இருப்பதை மாணவர்கள் கண்டனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க சுர்கி காவல்நிலையத்தின் 'டயல் 100' சிறப்பு சேவைக்கு உத்தரவு கிடைத்த சமயத்தில், அப்பிரிவின் வாகனம் பள்ளிக்கூடத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் 'பேர்கேடி' கிராமத்தின் அருகில் இருந்தது.

செய்தியை படிக்க:குழந்தைகளைக் காப்பாற்ற வெடிகுண்டை தூக்கிக்கொண்டு ஓடிய போலீஸ்காரர்

படத்தின் காப்புரிமை TEDGLOBAL

தான்சானியாவில் நடைபெற்ற டெடி குளோபல் மாநாட்டில், சிலிக்கான் இல்லாமல் எலியின் நியூரான்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் கணினியை நைஜீரியாவின் ஓஷி அகபி என்பவர் வெளியிட்டுள்ளார். இந்த கணினிக்கு வெடிகுண்டுகளின் வாசனையை கண்டறியும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதால், இதனை விமான நிலையங்களில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தலாம்.

செய்தியை படிக்க:வெடிகுண்டுகளை மோப்பம் பிடிக்கும் புதிய கணினி?

படத்தின் காப்புரிமை Getty Images

வட கொரியா ஏவிய ஏவுகணையொன்று வடக்கு ஜப்பான் மீது பறந்து இறுதியில் கடலில் விழுந்தது.

இந்த செய்தியை படிக்க: ஜப்பான் மீது பறந்த வட கொரிய ஏவுகணை : கடும் கோபத்தில் ஜப்பான் அரசு

படத்தின் காப்புரிமை Getty Images

பாலியல் வல்லுறவு வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் பெயர் பல சாதனை புத்தகங்களில் இடம்பெற்றுள்ளது.

இந்த செய்தியை படிக்க: குர்மித் ராம் ரஹீமின் உலக சாதனைகள்: கை கழுவுவது - வாழ்த்து அட்டை வரை

மூளைக்கு வேலை கொடுக்கும் பிபிசியின் புதிர் தொடரின் ஒன்பதாம் பகுதி இது.

புதிரை பார்க்க: ஆறாவது நாடு என்னவாக இருக்கும்? புதிரைக் கண்டுபிடியுங்கள்!

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :