முஸ்லிம் குடும்பத்தில் கிறித்தவக் குழந்தை: குடும்பத்தோடு சேர்த்துவைக்க நீதிமன்றம் ஆணை

ஐந்து வயதே ஆன பிரிட்டனைச் சேர்ந்த ஒரு கிறித்துவப் பெண் குழந்தை ஒரு இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த வளர்ப்புக் குடும்பத்தின் பராமரிப்பில் விடப்பட்டதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறப்படும் வழக்கில் அந்தக் குழந்தை தன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருடன் இருக்க வேண்டும் என்று லண்டன் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

அந்தக் குழந்தையைப் பராமரித்த அந்த வளர்ப்புக்குக் குடும்பதினருக்கு ஆங்கிலம் தெரியாது என்பதை உள்ளூர் அதிகாரிகள் மறுத்துள்ளனர். அந்தக் குழந்தை ஆங்கிலம் பேசும் கலப்பினக் குடும்பம் ஒன்றுடன் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

அந்தப் பெண் குழந்தையை அவளின் உறவினர் ஒருவரின் நிரந்தரப் பராமரிப்பில் விடவே விரும்பியாதாக லண்டனில் உள்ள டவர் ஹேம்லட்ஸ் கவுன்சில் தெரிவித்துள்ளது.

அந்தக் குழந்தையை வருங்காலத்தில் யார் பராமரிக்க வேண்டும் என்பது குறித்த இந்த முடிவை லண்டனில் உள்ள குடும்ப நீதிமன்ற நீதிமன்ற நீதிபதி கட்டூன் சப்னாராவால் செவ்வாயன்று அறிவிக்கப்பட்டது. இதற்கான உத்தரவு பின்னர் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தக் குழந்தையின் அடையாளம் வெளியாகாமல் பாதுகாக்கும் நோக்கில், இந்த வழக்கு குறித்த செய்திகளை வெளியிட சட்டபூர்வமான கட்டுப்பாடுகள் இருந்தாலும், ஒரு இஸ்லாமிய வளர்ப்புக் குடும்பம் எளிதில் பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில் இருந்த ஒரு கிறித்தவக் குழந்தை மீது அவர்களின் பழக்க வழக்கங்களையும் விழுமியங்களையும் திணித்ததாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

அந்தக் குடும்பத்தினர் ஆங்கிலம் பேசமாட்டார்கள் என்பது போன்ற பல தவறான தகவல்கள் அந்தச் செய்திகளில் உள்ளதாக டவர் ஹேம்லட்ஸ் கவுன்சில் தெரிவித்துள்ளது. ஆனால், அவர்கள் குறிப்பிட்ட சில தகவல்களை வெளியிடுவது சட்ட ரீதியாகத் தடுக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் நலத்தை மனதில் வைத்தே செயல்படுவதாக டவர் ஹேம்லட்ஸ் கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
குழந்தை பராமரிப்பின் அங்கமாகும் பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சி

குழந்தைகளுக்கு வளர்ப்புக் குடும்பம் தேர்ந்தெடுக்கப்படும்போது, அக்குழந்தைக்கு நிலையான பராமரிப்பு கிடைப்பதற்காக, பராமரிக்கும் குடும்பத்தின் கலாசார பின்புலம், தன் குடும்பத்துடன் தொடர்பு வைத்துக்கொள்ளவும், உறவை வளர்த்துக்கொள்ளவும் உதவும் அருகாமை, பள்ளிக்கூடத்தின் தொலைவு உள்ளிட்டவை கருத்தில் கொள்ளப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அந்தக் குழந்தை அதன் குடும்ப உறுப்பினர் ஒருவரால் பராமரிக்கப்படுவதற்காக தாங்கள் பணியாற்றி வருவதாகவும், அதையே தொடர்ந்து செய்வோம் என்றும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :