பிபிசி தமிழில் இன்று...மாலை 6 மணி வரை

பிபிசி தமிழில் இன்று (புதன்கிழமை) மாலை 6 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை AIADMK

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் திங்கள் கிழமையன்று நடந்த கூட்டத்தில் 77 சட்டமன்ற உறுப்பினர்களே கலந்துகொண்டார்கள் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

செய்தியை படிக்க: எடப்பாடி அணியில் எனது ஆதரவு "ஸ்லீப்பர் செல்கள்" உள்ளனர்: டி.டி.வி. தினகரன்

படத்தின் காப்புரிமை AFP

போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இலங்கை முன்னாள் ராணுவ தளபதி ஜகத் ஜெயசூர்ய மீது பிரேசில் மற்றும் கொலம்பியா ஆகிய தென் அமெரிக்கா நாடுகளில் சில மனித உரிமை குழுக்கள் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

செய்தியை படிக்க:இலங்கை 'போர்க்குற்றம்': ஜகத் ஜெயசூர்ய மீது தென் அமெரிக்காவில் வழக்கு

படத்தின் காப்புரிமை KCNA

ஜப்பான் மீது பறந்து சென்ற ஏவுகணைதான் பசிஃபிக் பிராந்தியத்தில் தங்கள் நாடு மேற்கொள்ளவுள்ள ராணுவ நடவடிக்கைகளின் ஆரம்பம் என்று வட கொரியா கூறியுள்ளது.

செய்தியை படிக்க :'இது ஆரம்பம்தான்': ஜப்பான் மீது பறந்த ஏவுகணை பற்றி வட கொரியா

படத்தின் காப்புரிமை Getty Images

ஒரு இஸ்லாமியக் குடும்பத்தின் பராமரிப்பில் இருந்த ஒரு ஐந்து வயது இஸ்லாமியப் பெண் குழந்தை அவள் பிறந்த குடும்ப உறுப்பினர் ஒருவராலேயே பராமரிக்கப்பட வேண்டும் என்று லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

செய்தியை படிக்க: இஸ்லாமிய குடும்பத்தில் கிறித்துவக் குழந்தை: குடும்பத்துடன் சேர்த்து வைக்க நீதிமன்றம் உத்தரவு

படத்தின் காப்புரிமை Narinder nanu

மத்திய அரசு திட்டங்களின் பலன்களைப் பெற அவற்றுடன் ஆதார் எண்ணை வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என நிர்ணயித்திருந்த காலக்கெடு வரும் டிசம்பர் 31-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

செய்தியை படிக்க: ஆதார்: இணைப்பு அவகாசம் டிசம்பர் 31வரை நீட்டிப்பு

பிரிட்டன் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்று இரு நாடுகளாக பிரிந்ததால் ஏற்பட்ட குழப்பம், அதிர்ச்சி, தொடரும் விளைவுகள் ஆகியவற்றை அலசும் பிபிசி ஆய்வின் 14--ஆவது பாகம் இது.

செய்தியை படிக்க:பாகிஸ்தானில் இருந்த இந்துக்கள் வீட்டின் தற்போதைய நிலை என்ன?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
விமானத்தில் இருந்து நிர்வாணமாக குதித்து வயலின் வாசித்தபடி தரையிறங்கிய இசைக் கலைஞர்

பறக்கும் விமானத்தில் இருந்து நிர்வாணமாக கீழே குதிப்பது பலருக்கும் சங்கடமான ஒன்றாக இருக்கலாம். ஆனால், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வயலின் இசைக் கலைஞர் கிளென் டோனலிக்கு அது ஒரு பெருமையாக உள்ளது.

செய்தியை படிக்க:விமானத்தில் இருந்து நிர்வாணமாக குதித்த இசைக் கலைஞர்

தமிழகத்தில் தற்போது நிலவும் சூழலில் தான் நடவடிக்கை ஏதும் எடுக்க முடியாது என தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யசாகர் தங்களிடம் கூறியதாக இன்று (புதன்கிழமை)அவரைச் சந்தித்த இடதுசாரி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

செய்தியை படிக்க:`தற்போது நடவடிக்கை எடுக்க முடியாது`: எதிர்கட்சிகளிடம் தமிழக ஆளுநர் கைவிரிப்பு?

டெல்லியில் தொடர்ந்து 46-ஆவது நாளாக தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். (காணொளி)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
டெல்லியில் தமிழக விவசாயிகள் 46-வது நாளாக போராட்டம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :