பிபிசி தமிழில் இன்று... மாலை 6 மணி வரை

பிபிசி தமிழில் இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை Thinkstock

மதுரையில் 'ப்ளூ வேல்' கணினி விளையாட்டு விளையாடிய கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

செய்தியைப் படிக்க: மதுரையில் 'ப்ளூ வேல்' கணினி விளையாட்டுக்கு ஒருவர் பலி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
இடிந்து விழுந்த 6 மாடிக் கட்டடம்

இந்தியாவின் பொருளாதார தலைநகரமாக கருதப்படும் மும்பையில் ஒரு ஆறு மாடி கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் குறைந்தது 7 பேர் இறந்துள்ளனர்.

செய்தியைப் படிக்க: மும்பையில் இடிந்து விழுந்த 6 மாடி கட்டடம்: 7 பேர் பலி

'நு' என்கிற மொழியை மிகவும் சரளமாக பேசுகின்ற மூன்று பேரில் ஒருவரான 84 வயதான எசௌ, தன்னுடைய குழந்தை பருவ மொழி அழிந்துவிடாமல் இருக்க தீவிரமாக உழைத்து வருகிறார்.

செய்தியைப் படிக்க: மூன்று பேர் மட்டுமே பேசும் பூர்வீக ஆப்ரிக்க மொழியை காப்பாற்ற முயற்சி

படத்தின் காப்புரிமை Getty Images

அந்த மாணவி எழுதிய கடிதத்தில், "எனக்கு வேறு வழி தெரியவில்லை. செத்துத்தான் ஆகனும். நான் என்ன தவறு செய்தேன்? என்னை ஏன் இப்படி பாடாய் படுத்துகிறார்கள்? எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால் தற்கொலை செய்துகொள்கிறேன்" என்று கூறப்பட்டிருந்தது.

செய்தியைப் படிக்க: மாதவிடாய் குறித்து ஆசிரியை கடிந்ததால் மாணவி தற்கொலை?

படத்தின் காப்புரிமை AFP

வடகொரியா ஏவும் ஏவுகணை அச்சுறுத்தலில் இருந்து இன்னும் எவ்வளவு காலத்துக்கு ஜப்பான் தன்னை தற்காத்துக்கொள்ள வேண்டும்? உண்மையை சொல்வதென்றால் அதற்கு இனி நேரமே கிடையாது என்கிறார் பிபிசி செய்தியாளர் கிறிஸ் மொரிஸ்.

செய்தியைப் படிக்க: வடகொரியா அச்சுறுத்தல்: ஜப்பான் எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்கும்?

படத்தின் காப்புரிமை AFP
Image caption போரில் இறுதி கட்டங்களில் ராணுவ தளபதியாக செயல்பட்ட ஜகத் ஜெயசூர்ய (நடுவில் இருப்பவர்)

போர் குற்றங்கள் தொடர்பாக தனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியாதென்று முன்னாள் இலங்கை ராணுவ தளபதி ஜகத் ஜெயசூர்ய தெரிவித்துள்ளார்.

செய்தியைப் படிக்க: 'போர்க்குற்றம்' தொடர்பாக எனக்கு எதிராக வழக்கு தொடர முடியாது: ஜகத் ஜெயசூர்ய

படத்தின் காப்புரிமை SONY TV

ஒன்பது வயது சிறுவன், 18 வயது பெண் ஒருவர் மீது காதல்கொள்கிறான் என்ற வினோத கதைக்களம் கொண்ட தொலைக்காட்சி தொடர் ஒன்று, குழந்தை திருமணத்தை ஆதரிப்பது போன்றுள்ளது என்று எழுந்த விமர்சனத்தால் நிறுத்தப்பட்டுள்ளது.

செய்தியைப் படிக்க: குழந்தை திருமணத்தை ஆதரிப்பதாக கருதப்பட்ட தொலைக்காட்சித் தொடர் நிறுத்தம்

இறந்து 20 ஆண்டுகளுக்குப் பின்னரும் பெரிதும் கொண்டாடப்படும் இளவரசி டயானா வாழ்வில் எடுக்கப்பட்ட சில முக்கியமான புகைப்படங்கள்.(காணொளி)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
இளவரசி டயானா - காணொளி

ஐ.எஸ். அமைப்பிடம் செக்ஸ் அடிமைகளாக இருந்து மீண்ட யாஸ்தி இனப் பெண்கள், தங்கள் வாழ்வை மறு நிர்மாணம் செய்ய முயல்கிறார்கள். அவர்கள் தங்கள் புனிதத்தலத்தில் தூய்மை சடங்கு செய்துகொள்கிறார்கள். (காணொளி)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஐ.எஸ். அமைப்பிடம் செக்ஸ் அடிமைகளாக இருந்த மீண்ட யாஸிடி பெண்கள்.

பாக்கரால் சூறாவளியால் ஹாங்காங்கிற்கு கிழக்கே மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்து 11 ஊழியர்கள் மீட்கப்படும் அதிசயிக்கத் தக்க காட்சி. (காணொளி)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஹாங்காங்கின் கிழக்கில் சூறாவளி காற்றால் மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்து 11 பேர் ஆச்சரியமூட்டும் வகையில் காப்பாற்றப்பட்டனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :