பிபிசி தமிழில் இன்று..

பிபிசி தமிழில் இன்று (வியாழக்கிழமை) வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை ISRO

ஐஆர்என்எஸ்எஸ் - 1எச் என்ற செயற்கைக்கோள் புவி வட்டப்பாதையில் ஏவும் முயற்சி தோல்வியில் முடிந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது. செயற்கைக்கோளின் வெப்பத் தகடுகள் பிரியாததால் தோல்வி ஏற்பட்டதாக இஸ்ரோவின் தலைவர் கிரண்குமார் தெரிவித்திருக்கிறார்.

செய்தியைப் படிக்க: இந்தியாவின் செயற்கைக்கோள் நிலைநிறுத்தும் முயற்சி தோல்வி

படத்தின் காப்புரிமை AFP

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பேனசீர் பூட்டோ, 2007ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். அக்கொலைச் சதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட, தாலிபன் குழுவைச் சேர்ந்தவர்களென சந்தேகிக்கப்பட்ட ஐந்து பேர் பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

செய்தியைப் படிக்க: பேனசீர் பூட்டோ கொலை வழக்கு: சந்தேக நபர்கள் விடுதலை

Image caption குடியரசுத் தலைவரை சந்தித்த எதிர்க்கட்சிக் குழவினர்.

19 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக்கொண்டு கவர்னரிடம் கடிதம் கொடுத்துள்ள நிலையில், அரசு தமது பலத்தை சட்டமன்றத்தில் நிரூபிக்கவேண்டும் என்று கோரும்படி கவர்னருக்கு உத்தரவிடவேண்டும் என்று திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஜனாதிபதியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

செய்தியைப் படிக்க: எடப்பாடி அரசு பலத்தை நிரூபிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு

படத்தின் காப்புரிமை Thinkstock

மதுரையில் 'ப்ளூ வேல்' கணினி விளையாட்டு விளையாடிய கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

செய்தியைப் படிக்க: மதுரையில் 'ப்ளூ வேல்' கணினி விளையாட்டுக்கு ஒருவர் பலி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
இடிந்து விழுந்த 6 மாடிக் கட்டடம்

இந்தியாவின் பொருளாதார தலைநகரமாக கருதப்படும் மும்பையில் ஒரு ஆறு மாடி கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் குறைந்தது 7 பேர் இறந்துள்ளனர்.

செய்தியைப் படிக்க: மும்பையில் இடிந்து விழுந்த 6 மாடி கட்டடம்: 7 பேர் பலி

'நு' என்கிற மொழியை மிகவும் சரளமாக பேசுகின்ற மூன்று பேரில் ஒருவரான 84 வயதான எசௌ, தன்னுடைய குழந்தை பருவ மொழி அழிந்துவிடாமல் இருக்க தீவிரமாக உழைத்து வருகிறார்.

செய்தியைப் படிக்க: மூன்று பேர் மட்டுமே பேசும் பூர்வீக ஆப்ரிக்க மொழியை காப்பாற்ற முயற்சி

படத்தின் காப்புரிமை AFP

வடகொரியா ஏவும் ஏவுகணை அச்சுறுத்தலில் இருந்து இன்னும் எவ்வளவு காலத்துக்கு ஜப்பான் தன்னை தற்காத்துக்கொள்ள வேண்டும்? உண்மையை சொல்வதென்றால் அதற்கு இனி நேரமே கிடையாது என்கிறார் பிபிசி செய்தியாளர் கிறிஸ் மொரிஸ்.

செய்தியைப் படிக்க: வடகொரியா அச்சுறுத்தல்: ஜப்பான் எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்கும்?

படத்தின் காப்புரிமை Getty Images

அந்த மாணவி எழுதிய கடிதத்தில், "எனக்கு வேறு வழி தெரியவில்லை. செத்துத்தான் ஆகனும். நான் என்ன தவறு செய்தேன்? என்னை ஏன் இப்படி பாடாய் படுத்துகிறார்கள்? எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால் தற்கொலை செய்துகொள்கிறேன்" என்று கூறப்பட்டிருந்தது.

செய்தியைப் படிக்க: மாதவிடாய் குறித்து ஆசிரியை கடிந்ததால் மாணவி தற்கொலை?

மறைந்த இளவரசி டயனாவின் இருபதாவது ஆண்டு நிறைவை அனுஷ்டிக்கும் வகையில் லண்டன் கென்ஸிங்டன் மாளிகைக்கு வெளியே பொதுமக்கள் மலர்களை வைத்து அஞ்சலி செய்கிறார்கள்.(காணொளி)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
மக்கள் உள்ளத்தில் நிறைந்த இளவரசி டயனா

ஐ.எஸ். அமைப்பிடம் செக்ஸ் அடிமைகளாக இருந்து மீண்ட யாஸ்தி இனப் பெண்கள், தங்கள் வாழ்வை மறு நிர்மாணம் செய்ய முயல்கிறார்கள். அவர்கள் தங்கள் புனிதத்தலத்தில் தூய்மை சடங்கு செய்துகொள்கிறார்கள். (காணொளி)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஐ.எஸ். அமைப்பிடம் செக்ஸ் அடிமைகளாக இருந்த மீண்ட யாஸிடி பெண்கள்.

பாக்கரால் சூறாவளியால் ஹாங்காங்கிற்கு கிழக்கே மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்து 11 ஊழியர்கள் மீட்கப்படும் அதிசயிக்கத் தக்க காட்சி. (காணொளி)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஹாங்காங்கின் கிழக்கில் சூறாவளி காற்றால் மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்து 11 பேர் ஆச்சரியமூட்டும் வகையில் காப்பாற்றப்பட்டனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :