ஹ்யூஸ்டன் வெள்ளப்பெருக்கு: நாடாளுமன்றத்திடம் பேரிடர் மீட்புதவி நிதி கோரும் வெள்ளை மாளிகை

ஹார்வே சூறாவளியால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக அவசரகால மீட்புதிவி நிதியை வெள்ளை மாளிகை நாடாளுமன்றத்திடம் கோரவுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

"அமெரிக்க மக்கள் அனைவரும் உங்களுடன் இருக்கின்றனர்" என்று அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் டெக்ஸாஸில் பயணம் மேற்கொண்டபோது தெரிவித்திருக்கிறார்.

"இதற்கு முன்னால் இருந்ததைவிட, இந்த நகரமும், மாநிலமும், பிராந்தியமும் பெரிதாக, மேம்பட்டதாக மீள்கட்டமைக்கப்படும்வரை தினமும் நாங்கள் உங்களுடன் இருப்போம்" என்று அவர் கூறியுள்ளார்.

தொடக்க பேரிடர் மீட்புதவி தொகையாக 5.9 பில்லியன் டாலர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேட்பார் என்று எதிர்பார்ப்பதாக அசோசியேடட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய அரசிடம் இருந்து இந்த மாநிலத்துக்கு 125 பில்லியன் டாலர் பேரிடர் மீட்புதவி நிதி தேவைப்படலாம் என்று டெக்ஸாஸ் ஆளுநர் கிரெக் அபோட் முன்னதாக தெரிவித்திருந்தார்.

படத்தின் காப்புரிமை Reuters

இந்த புயலின்போதும், அதற்கு பின்னரும் குறைந்தது 33 பேர் பலியாகியுள்ளனர்.

3 லட்சத்து 11 ஆயிரம் பேர் பேரிடர் மீட்புதவிக்காக பதிவு செய்துள்ளதாகவும், இந்த நிதி கோரிக்கைக்கு நாடாளுமன்றத்திடம் இரு கட்சிகளின் ஆதரவும் கிடைக்கும் என்று நம்புவதாகவும் துணை அதிபர் பென்ஸ் தெரிவித்திருக்கிறார்.

இந்தப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு மீட்புதவி எப்போது கிடைக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை.

ஹார்வி வெள்ளப்பெருக்கு: உயிரைக் காத்த கயிறு

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
அமெரிக்கா வெள்ளம்

பிற செய்திகள்

சூறைக்காற்று தாக்கிய இடங்களில் ஊரடங்கு உத்தரவு

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சூறைக்காற்று தாக்கிய இடங்களில் ஊரடங்கு உத்தரவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :