அ.தி.மு.க. பொதுக்குழுவைக் கூட்டுபவர்கள் மீது நடவடிக்கை: டிடிவி தினகரன்

அ.தி.மு.கவின் பொதுக்குழுவை கூட்டப்போவதாக அறிவித்தவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாகவும், அதில் கலந்துகொள்வர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிடிவி தினகரன் அறிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AIADMK

ஆளும் அ.தி.மு.கவில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணிக்கும், டிடிவி தினகரன் தலைமையிலான அணிக்கும் இடையில் மோதல் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், செப்டம்பர் 12ஆம் தேதியன்று அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டமானது அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் கூட்டப்படும் என எடப்பாடி அணி அறிவித்தது.

தலைமைக் கழக நிர்வாகிகள் இதனை அறிவிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்தக் கூட்டம் குறித்து டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், பொதுக்குழு என்ன நோக்கத்திற்காகக் கூட்டப்படுகிறது என்பது குறிப்பிடப்படவில்லையென்றும், யாருடைய கையெழுத்தும் அந்த அறிவிப்பில் இல்லையென்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

கட்சியின் விதிமுறைகளின்படி, பொதுக்குழுவையும் செயற்குழுவையும் பொதுச்செயலாளர் என்ற முறையில் வி.கே. சசிகலா மட்டுமே கூட்ட முடியும் என்றும் செப்டம்பர் 12ஆம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடக்கும் என்ற அறிவிப்பிற்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்றும் தினகரன் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

கட்சித் தொண்டர்கள் யாரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்றும் மீறி கலந்துகொள்பவர்கள் மீது கட்சி விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்தக் கூட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தினகரன் தெரிவித்திருக்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்