புதுவகை கார் குண்டு தயாரித்துள்ள ஐரிஷ் ஆயுதக் குழு

புதிய ஐரிஷ் ரிபப்ளிக் ஆர்மி என்னும் ஆயுதக்குழு காருக்கு அடியில் வைத்து வெடிக்கச் செய்யக்கூடிய புதிய வெடிகுண்டை உருவாகியுள்ளதாக வட அயர்லாந்து காவல் துறை தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை PACEMAKER
Image caption கார் வெடிகுண்டு

கார் அதன் மீது ஏறும்போது, அதை வெடிக்கச்செய்யும் அழுத்தத்தைத் தரக்கூடிய தகடுகள் அந்த குண்டில் உள்ளன.

கடந்த பிப்ரவரி மாதம், லண்டன் டெர்ரியில், இந்தக் குழுவினர், பணியில் இல்லாத ஒரு அதிகாரியை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தியபோது இதே முறையைக் கையாண்டனர்.

"இது மிகவும் நுட்பமான முறை இல்லாவிட்டாலும், மிக நன்கு செயல்படும் முறை," என்று துணைக் கண்காணிப்பாளர் ஜான் மெக்வீ கூறியுள்ளார். இந்தப் புதிய ஆயுதக் குழுவுக்கு வெடிபொருட்கள் கிடைப்பது பற்றியும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில், காந்த சக்தியால் செயல்படும் கார் வெடிகுண்டுகளையே காவல் அதிகாரிகளுக்கு எதிராக இக்குழு பயன்படுத்தியுள்ளது.

தற்போது தயாரிக்கப்படும் கார்களில் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகம் இருப்பதால் காந்த வெடிகுண்டு பொருத்துவது அவர்களுக்குக் கடினமாவிட்டது என்று மூத்த காவல் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :