பிபிசி தமிழில் இன்று... 2 மணி வரை

பிபிசி தமிழில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை Getty Images

14 குழந்தைகளின் தாயான தம்மி உம்பேல், தனது பிள்ளைகள் யாரையும் பள்ளிக்கே அனுப்பவில்லை. இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது, இன்றைய சூழலில் சில குழந்தைகள் இருந்தாலே கல்விக் கட்டணம் அதிகம். 14 குழந்தைகளை பெற்றால் எப்படி படிக்க வைப்பது என்று தோன்றுகிறதா? இது ஒரு ஏழைத் தாயின் கதை என்று நினைக்கவேண்டாம். இது கோடீஸ்வரியான ஒரு தாய் மற்றும் அவரின் 14 குழந்தைகள் பற்றிய தற்கால நிகழ்வு.

செய்தியை படிக்க:14 குழந்தைகளின் தாய் கோடீஸ்வரியானது எப்படி?

படத்தின் காப்புரிமை CNES

பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றின் மீது ஏற்றிச் செல்லக்கூடிய அணுஆயுதம் ஒன்றை தாங்கள் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது.

செய்தியை படிக்க:அணுஆயுத சோதனை 'வெற்றி' : வட கொரியா அறிவிப்பு

நீட் தேர்வின் காரணமாக மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காத நிலையில், தற்கொலைசெய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்தை அடுத்து, மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்க தமிழக சுகாதாரத் துறை முடிவுசெய்துள்ளது.

செய்தியை படிக்க:அனிதாவின் மரணத்தை தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு மனநல ஆலோசனை

படத்தின் காப்புரிமை REUTERS/KCNA

மிகவும் நவீனமான மற்றும் சக்திவாய்ந்த அணுஆயுதமொன்றை தாங்கள் உருவாக்கியுள்ளதாகவும், அதனை ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை மீது ஏற்றிச் செல்லமுடியும் என்றும் வட கொரியா தெரிவித்துள்ளது.

செய்தியை படிக்க:சக்திவாய்ந்த அணுஆயுதமொன்றை வட கொரியா உருவாக்கியுள்ளதா?

படத்தின் காப்புரிமை AIADMK

நீட் தேர்வின் காரணமாக மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காத நிலையில், தற்கொலைசெய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவுக்கு நீதி வேண்டி திங்கள்கிழமை (செப் 4) திமுக நடத்தவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், அதிமுகவினர் கலந்துகொள்வார்கள் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் அறிவித்துள்ளார்.

செய்தியை படிக்க:அனிதா மரணம்: திமுக நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்பு?

படத்தின் காப்புரிமை KARIM SAHIB/AFP

கடந்த வார நிகழ்வுகளின் சிறந்த புகைப்படங்களில் சிலவற்றை செய்திக் குறிப்போடு உங்களுக்குத் தொகுத்து வழங்குகிறோம்.

புகைப்படங்களை பார்க்க:புகைப்படங்களில் இந்த வாரம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்