50 வயது ஆண்களில் பத்தில் ஒருவரின் 'இதயம் 10 வயது கூடுதலாக இருக்கும்'

படத்தின் காப்புரிமை Getty Images

செப்டம்பர் மாதத்தில் மட்டும் இங்கிலாந்தில் மாரடைப்பு அல்லது பக்கவாதத்தால் 7,400 பேர் இறக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

50 வயதை எட்டிய ஆண்களில் பத்தில் ஒரு ஆணின் இதயத்தின் வயது, அவரின் உண்மையான வயதை விட பத்து வருடங்கள் கூடுதலாக இருக்கும். எனவே அவர்களுக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகம் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

1.2 மில்லியன் எண்ணிக்கையிலான மக்களிடம், 'பப்ளிக் ஹெல்த் இங்கிலாந்து' மேற்கொண்ட ஆய்வில், அவர்களுக்கு இதய ஆய்வு பரிசோதனைகள் செய்யப்பட்டது. அதில் 33,000 பேர் 50 வயதானவர்கள்.

இதய நோய்கள் ஆண்களின் மரணத்திற்கு முக்கிய முதல் காரணமாக இருந்தால், பெண்களின் மரணத்திற்கு இரண்டாவது முக்கிய காரணமாக இருக்கிறது.

இந்த இறப்புகளில் பெரும்பான்மையானவற்றை தவிர்க்கமுடியும், அதில் நான்கில் ஒரு பங்கினர் 75 வயதுக்கும் குறைவானவர்கள்.

"நமக்கு வயதாகும் வரை இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற ஆபத்துகளை கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடாது," என்று பி.எச்.இ-இன் இதய நோய்கள் பிரிவின் ஜமி வாட்டரால் கூறுகிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்