எஃகு தேவையை பூர்த்தி செய்யும் போர் ஆயுத எச்சங்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

எஃகு தேவையை பூர்த்தி செய்யும் போர் ஆயுத எச்சங்கள்

அங்கோலாவில் எஃகுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் சில முதலீட்டாளர்கள் எஃகு ஆலைகளை நிர்மாணித்துள்ளனர்.

கட்டட நிர்மாணத்துறையை ஊக்குவிக்கும் முகமாக அங்கு முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போரின் எச்சங்களான இராணூவ டிரக்குகள், யுத்ததாங்கிகள் மற்றும் துருப்பிடித்த கார்களை மறுசுழற்சிக்கு உள்ளாக்குகிறார்கள். அதற்கு உலகவங்கி நிதி உதவி வழங்கியுள்ளது.

இப்போது அங்கு ஒப்பீட்டளவில் அரசியல் ஸ்திரத்தன்மையும் பொருளாதார வளர்ச்சியும் காணப்படுகின்றன. நிலைமையை ஆராய பிபிசி குழு ஒன்று அங்கு சென்றது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :