இவர்களில் யாரால் 3 மொழிகள் பேசமுடியும்?! புதிர் - 13

உங்கள் மூளையை தயார்படுத்தி, இந்த புதிரைக் கண்டுபிடியுங்கள்.நீங்கள் அசத்துவீர்கள் என்று நம்புகிறோம்!

வாழ்த்துக்கள்!

படத்தின் காப்புரிமை Getty Images

மூளைக்கு வேலை கொடுக்கும் பிபிசியின் புதிர் தொடரின் பதினொன்றாம் பகுதி இது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
உங்கள் மூளைக்கு பயிற்சி கொடுங்கள்

புதிர் -13

அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் 100 பேர் கலந்து கொண்டனர். அதில் 90 பேர் ஆங்கிலம் பேசினர். 80 பேர் இத்தாலி மொழியை பேசினார்கள் மற்றும் 75 பேர் சீன மொழியை பேசினர். எனவே இதில் குறைந்தபட்சமாக எத்தனை பேர் அனைத்து மூன்று மொழிகளையும் பேசுவர்?

விடை:

45

10 பேரால் ஆங்கிலம் பேச இயலாது. 20 பேரால் இத்தாலி மொழியை பேச இயலாது. மேலும் 25 பேரால் சீன மொழியை பேச இயலாது. எனவே அதிகபட்சமாக 25 பேர் இரண்டு மொழிகளை பேசுவர்.

இந்த 25 பேரை தவிர அனைவரும் மூன்று மொழிகளையும் பேசுவர் என்று கூற இயலாது.

எனவே, நாம் முதலில் பார்த்த 10, 20 , 25 என்ற எண்ணிக்கையை எடுத்து கொண்டால் மொத்தம் 55 பேர். எனவே இந்த 55 பேர் ஏதாவது ஒரு மொழியை பேச மாட்டார்கள் என்று எடுத்து கொண்டால் மீதமுள்ள 45 பேரும் அனைத்து மூன்று மொழிகளையும் பேசுவார்கள் என்று வைத்துக் கொள்ளலாம்.

இந்த புதிர் ஷார்ப்பிரைன்ஸ்.காமிலிருந்து(sharpbrains.com.)எடுக்கப்பட்டது.

முந்தைய புதிர்கள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்