கரீபியன் தீவுகளை தாக்கத்தொடங்கிவிட்ட இர்மா சூறாவளி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கரீபியன் தீவுகளை தாக்கத்தொடங்கிவிட்ட இர்மா சூறாவளி

அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகியுள்ள மிகவும் கடுமையான இர்மா சூறாவளி முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் கரீபியன் தீவுகளை வடமேற்காக தாக்கத்தொடங்கியுள்ளது.

மணிக்கு சுமார் முன்னூறு கிலோமீட்டர்கள் வேகத்திலான, இந்த ஐந்தாவது தரமாக வகைப்படுத்தப்பட்ட சூறாவளி ஏற்கனவே அன்குலீனா, அண்டிகுவா மற்றும் பார்புடா தீவுகளை தாக்கியுள்ளது.

செயிண்ட் பார்த்தலமி மற்றும் செயிண்ட் மார்ட்டென் ஆகியவை ஏற்கனவே பாதிக்கப்பட்டுவிட்டன.

இந்த தீவுகளில் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மறுத்த ஆயிரக்கணக்கான மக்களின் நிலை குறித்து பிரான்ஸ் கவலை வெளியிட்டுள்ளது.

இவை குறித்த பிபிசியின் காணோளி.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :