இர்மா சூறாவளி: கரீபியன் தீவுகளில் ஏற்பட்ட பேரழிவால் 7 பேர் பலி

கரீபியன் தீவுகளை மிகவும் கடுமையான வேகத்தில் தாக்கியுள்ள இர்மா சூறாவளியின் பாதிப்பால் குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

கரீபியன் தீவுகள் எங்கும் மிகப்பரவலான சேதங்களை இர்மா சூறாவளி உருவாக்கியுள்ளது.

அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகியுள்ள மிகவும் கடுமையான இர்மா சூறாவளி முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் சேதங்களை உருவாக்கி வருகிறது.

மிகவும் சிறிய அளவிலான பார்புடா தீவுகள் இந்த சூறாவளியால் வாழ்வதற்கு அரிதான இடமாக மாறிவருவதாக கூறப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Reuters

கடுமையான பாதிப்படைந்துள்ள பிரெஞ்சு பிராந்தியமான செயிண்ட் மார்டின் தீவு கிட்டத்தட்ட முற்றிலுமாக அழிந்த நிலையில் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தற்போது ஏற்பட்டுள்ள அழிவுகளுக்கு பிறகு இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்.

இதற்கிடையே, தற்போது உருவாகியுள்ள மேலும் 2 புயல்கள் சூறாவளியாக உருவெடுக்கின்றன.

முன்னதாக, கடந்த வாரத்தில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கன மழையுடன் ஹார்வி புயல் புரட்டி எடுத்து வரும் நிலையில், ஹுஸ்டன் நகரையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கிய சுமார் 2000 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை படத்தின் காப்புரிமைTWITTER/@CAROLEENAM/REUTERS
Image caption ஹூஸ்டனில் பேரழிவு உண்டாக்கிய ஹார்வி புயல்

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஐந்து பேர் உயிரிழந்ததாக தேசிய வானிலை சேவை அலுவலகம் கூறியது. ஆனால், ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக ஹூஸ்டன் உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த 2004-ஆம் ஆண்டில் ஏற்பட்ட சார்லி புயலுக்கு பிறகு வீசும் கடுமையான புயலாக ஹார்வே புயல் கருதப்படுகிறது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
கரீபியன் தீவுகளை தாக்கத்தொடங்கிவிட்ட இர்மா சூறாவளி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்