1965 போர்: பாகிஸ்தானின் நோக்கம் நிறைவேறாத காரணம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே 1965-இல் நடைபெற்ற யுத்தம் தொடர்பான 22 கட்டுரைகள் கொண்ட பிபிசி தொடரின் நான்காம் பாகம்.

படத்தின் காப்புரிமை PUSHPINDAR SINGH
Image caption அல்வாரா விமானதளத்தில் தீர சாகசங்கள் புரிந்த வினோத் நைவ், விமானப்படை தலைவர் அர்ஜுன் சிங்குடன் ராத்தோர்

1965 செப்டம்பர் 6-ஆம் தேதி இரவு நேரத்தில் பாகிஸ்தானின் விமானங்கள் இந்தியாவின் மூன்று விமானத் தளங்களில் தாக்குதல் நடத்தின. அல்வாராவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பொறுப்பேற்றார் பாகிஸ்தானின் தலைசிறந்த பைலட் ரஃபீகி.

பதான்கோட்டிற்கு சென்ற படைப்பிரிவுக்கு பாகிஸ்தானின் ஸ்காவண்ரன் தலைவர் சஜ்ஜாத் ஹைதரும், ஆதம்புருக்கு சென்ற படைப்பிரிவுக்கு ஸ்காவண்ரன் எம்.எம் ஆலமும் தலைமையேற்றார்கள்.

பதான்கோட் விமானத் தளத்தைத் தாக்குவதில் பாகிஸ்தான் படையினர் வெற்றி பெற்றனர்.

சஜ்ஜாத் ஹைதரின் குழு தளத்தில் இருந்த இந்தியாவின் பத்து விமானங்களை அழித்தது.

ஆதம்புரில் ஆலமின் தாக்குதலை ஜகாரியா சமாளித்தார். சஜ்ஜாத் எந்தவித சேதத்தையும் ஏற்படுத்த முடியாமல் திரும்பினார்.

ஆலம் திரும்பிவரும்போது ரஃபீகியின் குழுவினர் அவரை சந்திக்க நேர்ந்தது. இந்தியாவின் ஏழு விமானங்கள் அந்தத் தளத்தில் தயாராக இருப்பதாக ரஃபீகிக்கு சஜ்ஜத் ஹைதர் எச்சரிக்கை விடுத்தார்.

ரஃபீகி இதற்கு முன் நடைபெற்ற யுத்தத்தில் இந்தியாவின் இரண்டு விமானங்களை வீழ்த்தியிருந்தார். எனவே ஆலமின் எச்சரிக்கைக்குப் பின்னரும் ரஃபீகி முன்னேறிச் சென்றார்.

இது எந்த விமானம்?

அதே சமயத்தில் அல்வாரா விமான தளத்தில், அப்போதுதான் பைலட் பயிற்சி எடுத்திருந்த, இதுவரை அனுபவம் இல்லாத வினோத் நேப், தனக்கும் ஏதாவது பணி வழங்குமாறு, தன்னுடைய மூத்த அதிகாரியும் குழுவின் தலைவருமான ஜானிடம் முறையிட்டார். விமான ரோந்துப்பணியில் வினோத்தை ஈடுபடச்சொன்னார் ஜான்.

படத்தின் காப்புரிமை DEFENCE.PK

வினோத் நேப் அந்தச் சம்பவத்தை நினைவுகூர்கிறார், "நான் அப்போது வேலைக்குப் புதியவன். எனக்கு தன்னம்பிக்கை குறைவாக இருந்ததால், விரைவாக ஹெல்மெட் போட்டுக்கொண்டு ஓடிச்சென்று சுவிட்சுகளை ஆன் செய்துவிட்டு விமானத்தின் இருக்கையில் அமர்ந்தேன். அப்போது ராத்தோர் ஓடிவருவதைப் பார்த்தேன். அவர் விமானத்தை உடனடியாகக் கிளப்புமாறு சைகை காட்டினார்."

நான் விமானத்தைக் கிளப்பி வானில் சென்றபோது, ராத்தோரின் விமானத்திற்கும் என்னுடைய விமானத்திற்கும் இடையே 250 மீட்டர் தூரம் இருந்தது."

"திடீரென்று மூன்று விமானங்கள் பறந்து வந்ததை பார்த்தேன். அதை நான் போகி ரக விமானம் என்று சொன்னேன். அது சேபரா அல்லது வேறு எதாவது ஒரு விமானமா என்றுகூட தெரியாது. சொல்லப்போனால் அவையும் எங்களின் விமானங்கள் என்றே முதலில் நினைத்தேன்."

"ராத்தோரின் பின்புறம் சென்று கொண்டிருந்த நான், அவர் துப்பாக்கியால் சுடுவதை அப்போதுதான் பார்த்தேன். புகை எழும்பியது. இது சேபர், ஓ மை காட், என் முன்னே இன்னொரு விமானம் வந்தது."

பிங்லே மற்றும் காந்தியின் விமானங்கள் வீழ்ந்தன

பாகிஸ்தானின் விமானங்கள் அல்வாரா விமான தளத்திற்கு அருகில் வந்தன. சைரன்கள் ஒலித்தன. விமானத் தாக்குதல்கள் தொடங்கின. தளத்தில் இருந்த படையினர் விமானத் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் பதுங்கு குழிக்குள் தஞ்சம் புகுந்தனர்.

படத்தின் காப்புரிமை BBC WORLD SERVICE

அவர்கள் கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை, ஏனெனில், விமானிகள் பி.என் பிங்லே மற்றும் அதி காந்தி ஆகியோர் இயக்கிய விமானங்கள் ஏற்கனவே பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.

பி.வி.எஸ் ஜகன்மோஹன் மற்றும் சமீர் சோப்ரா எழுதியுள்ள 'இந்தியா பாகிஸ்தான் விமானப்போர் 1965' புத்தகத்தில், 'ரஃபீகியின் விமானம் பிங்லே மற்றும் காந்தியின் விமானங்களுக்கு இடையில் வந்தது, ஆறு ப்ரவுனிங் துப்பாக்கிகளில் இருந்து பொழிந்த குண்டு மழை பிங்லே இயக்கிய விமானத்தைத் தாக்கியதில், அதன் காக்பிட்டில் புகை நிரம்பியது. எனவே அல்வாரா விமானத் தளத்திலேயே அது கீழே விழுந்தது."

"காந்தியின் விமானத்தை ரஃபீகின் மூன்றாம் எண் செயில் செளத்ரி விமானம் தாக்கியது. 150 அடி உயரத்தில் இருந்து அல்வாரா விமானதளத்தின் வெளிப்புறத்தில் விழுந்த விமானம் நொருங்கிப்போனது."

ரஃபீகியின் விமானத்தை வீழ்த்தினார் ராத்தோர்

படத்தின் காப்புரிமை KAISER TUFAIL
Image caption 1965 போரில் வீர சாகசம் புரிந்த ரஃபீகிக்கு பாகிஸ்தானின் உயரிய வீர விருது கிடைத்தது

வான்வழி கண்காணிப்பை மேற்கொண்டிருந்த விமானப்படைத் தளபதி டி.என் ராத்தோரும் வினோத் நேபும், ரஃபீகியின் குழுவினரை எதிர்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டது. ரத்தோர், 500 கெஜ தூரத்தில் இருந்து குறிவைத்து ரஃபீகியின் விமானத்தின்மீது சுட்டதில் விமானம் இடதுப்புறமாக கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்தது.

வினோத் நேப் பாகிஸ்தானின் மற்றொரு சேபர் விமானத்தைப் பின்தொடர்ந்தார். "நான் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தேன், ஆனால் அது கீழே சென்றுகொண்டிருந்தது. அப்போதுதான் எனக்கு நினைவுக்கு வந்தது, நான் எனக்குள்ளே சொல்லிக்கொண்டேன், முதலில் புவியீர்ப்பை சரிசெய், அப்போதுதான் குண்டு சரியாகச் செல்லும். பிறகுதான் அதை சரிசெய்தேன்."

படத்தின் காப்புரிமை PUSHPINDER SINGH
Image caption வினோத் நேவால் சுட்டு வீழ்த்தப்பட்டு கீழே விழும் விமானம்

வினோத் சொல்கிறார், "என்னுடைய முதல் குண்டு, விமானத்தின் வால்பகுதியை தாக்கியது. ஆனால், ஏன் அந்த விமானத்தின் வேகத்தை அதிகரிக்கவில்லை என்று வியப்பாக இருந்தது. ஒரு கட்டத்தில் நான் என்னுடைய விமானத்தின் வேகத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டியிருந்தது, இல்லாவிட்டால் நான் அதற்கு முன்னே சென்றிருப்பேன்."

"எந்தவொரு விமானத்தையும் வீழ்த்த 20 முதல் 50 குண்டுகள் போதுமானது என்று பயிற்சியில் கற்றுக்கொடுத்திருந்தார்கள். போரின்போது என்னிடம் 30 எம்.எம் அளவுகொண்ட நான்கு துப்பாக்கிகள் இருந்தன. ஆனால், விமானம் எனது குண்டுகளில் இருந்து தப்பிக் கொண்டேயிருந்தது.

Image caption பிபிசி ஸ்டுடியோவில் ரெஹான் ஃபஜலுடன் வினோத் நேவ்

இறுதியில் வினோத்தின் முயற்சி வெற்றிபெற்றது. குண்டு எதிரியின் மீது பட்டதா இல்லையா என்று தெரியவில்லை என்றாலும், தொடர்ந்து சுட்டுக் கொண்டேயிருந்தேன். விமானத்தின் ஒரு இறக்கை உடைந்து விழுவதைப் பார்த்தேன். அப்போது விமானம் இடப்புறமாக திரும்பியது."

"பிறகு எதிரி விமானத்தின் இடப்புற இறக்கையும் உடைந்து, விமானம் எரியத் தொடங்கியது. சிதறும் விமானத்திற்கும் என்னுடைய விமானத்திற்குமான இடைவெளி ஐம்பது மீட்டரைவிட குறைவாகவே இருந்தது. சிதறும் பாகங்கள் என் பக்கம் தெறிக்கத் தொடங்கியது. நான் பிரேக் போடாமல் இருந்திருந்தால் என் கதி அதோகதிதான்."

எதிரி விமானத்தை சுட்டி வீழ்த்திய பிறகு தரையிறங்கிய வினோத்துக்கு உற்சாக வரவேற்பு கிடைத்தது.

படத்தின் காப்புரிமை USI
Image caption வினோத் நேவால் வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் விமானம்

ரஃபீகியின் அடையாள அட்டை

அல்வாராவுக்கு அருகில் சேவர் ஜெட்டின் சிதைந்த பாகங்கள் கிடைத்தன. அதன் அருகில் ஸ்காவண்ட்ரன் தலைவர ரஃபீகியின் சடலமும் கிடந்தது. அதைப் பார்த்தால், விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பின் அவர் இறந்திருப்பார் என தோன்றவில்லை.

ரஃபீகின் அடையாள அட்டை கிடைத்தது. அவரது உடலுக்கு முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. யுத்தம் முடிந்த பிறகு ஏர் மார்ஷல் அர்ஜுன் சிங் பாகிஸ்தான் சென்றபோது, அவர் ரஃபீகின் அடையாள அட்டையை எடுத்துச் சென்று, ரஃபீகியின் மனைவியிடம் ஒப்படைத்தார்.

படத்தின் காப்புரிமை KAISER TUFAIL
Image caption அமர்ந்திருப்பவர்களில் மத்தியில் இருப்பவர் பாகிஸ்தான் விமானப்படையின் ஸ்காவண்ட்ரன் தலைவர் ரஃபீகி

துப்பாக்கியால் சுடும்போது, குண்டுகளில் இருந்து பிரிந்து வெளியேறிய `ஷெல்கள்` (உறைகள்) அதற்குரிய பகுதிக்குள் குவிந்துக் கொண்டிருந்தன. நான் கீழே இறங்கியதும் விமானத்தில் இருந்து அதை எடுத்தபோது அவை கீழே கொட்டின. அது கண்கொள்ளாக் காட்சியாக இருந்த்து.

அந்த துப்பாக்கிகளை விமானத்தில் பொருத்திய பணியாளர், அந்த ஷெல்களை வாரி எடுத்து தனக்குத்தானே அபிஷேகம் செய்வதுபோல தலையில் கொட்டிக்கொண்ட காட்சி அப்படியே எனக்கு நினைவிருக்கிறது."

தான் பொருத்திய துப்பாக்கி எதிரி விமானத்தை சுட்டு வீழ்த்தியதை நினைத்து அவர் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தையால் விவரிக்கமுடியாது. நன் ஓடிச் சென்று அவரை கட்டிப்பிடித்து எனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டேன். எனது செயலுக்காக மகிழ்ச்சியை வெளிப்படுத்திய முதல் மனிதர் அவர்தான்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்த கதை(காணொளி)

பாகிஸ்தானின் உயரிய வீர விருதுகளில் ஒன்றான 'ஹிலால்-ஏ-ஜுர்ரத்' ரஃபீகிக்கு வழங்கப்பட்டது. பாகிஸ்தானின் ராணுவ வரலாற்றாசிரியர் கைஸர் துஃபைல் கூறுகிறார், "உண்மையில், பதான்கோட்டில் இந்திய தரப்பினர் எச்சரிக்கை அடைந்துவிட்டனர். அல்வாராவின் வான்பரப்பில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தவர்கள், பாகிஸ்தானின் ரஃபீகி, யூனுஸ் மற்றும் செசில் சௌத்ரி தாக்குதல் நடத்த முயன்றபோது, எதிர்தாக்குதல் நடத்திவிட்டார்கள்."

துஃபைல் சொல்கிறார், "ரஃபீகி ஒரு விமானத்தை வீழ்த்திவிட்டார். மற்றொரு விமானத்தை குறிவைத்தபோது, அவருடைய துப்பாக்கி 'ஜாம்' ஆகிவிட்டது. அங்கிருந்து கிளம்புவதே சிறந்தது என்று நினைத்து அவர் கிளம்புவதற்குள், பின் தொடர்ந்து வந்த இந்திய விமானத்தில் இருந்த ராத்தோர் தாக்குதல் நடத்தினார். ரஃபீகியின் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது."

நேபுக்கு பயிற்சி அவசியம் இல்லை

பிற்காலத்தில் ராத்தோர் இந்திய விமானப்படையின் ஏர் மார்ஷல் பதவிவரை உயர்ந்தார். இப்போது சண்டிகரில் வசிக்கும் அவரின் உடல்நிலை குன்றியிருக்கிறது. ரஃபீகியின் விமானத்தை வீழ்த்திய நினைவுகூட அவருக்கு தற்போது இல்லை.

ராத்தோருக்கும், வினோத் நேபுக்கும் அவர்களது செயலுக்காக வீர சக்ர விருது வழங்கப்பட்டது. சில நாட்களுக்கு பிறகு விமானப்படைத் தளபதி தனது கான்பெரா விமானத்தில் அல்வாரா விமான தளத்திற்கு வந்ததாக சொல்கிறார் வினோத் நேப்.

படத்தின் காப்புரிமை VINOD NAIB
Image caption 1965 போரில் வீரச் செயல் புரிந்த வினோத் நேப் வீர் சக்ர விருதுபெறுகிறார்

பதக்கம் பெற்ற பைலட்டுகளை சந்தித்தார் அர்ஜுன் சிங். 'தற்போது பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறாயா?' என்று வினோத்திடம் கேட்டிருக்கிறார் விமானப்படைத் தளபதி.

ஆமாம் என்ற பதில் கிடைத்ததும், வினோதின் மேலதிகாரியை அழைத்து, 'விமானங்களை சுட்டு வீழ்த்தும் பயிற்சியை பைலட்டுகளுக்கு தருகிறோம், இவர் ஏற்கனவே அதை வெற்றிகரமாக செய்துவிட்டார், பிறகு எதற்கு இவருக்கு பயிற்சி?, தேவையில்லை' என்று சொன்னார்.

அதாவது, செப்டம்பர் ஆறாம் தேதியன்று, முழு பயிற்சி வகுப்புகளும், பாடத்திட்டங்களும் முடிவடையாதபோதே வினோத் யுத்தத்தில் பங்கேற்றார், எதிரி விமானத்தை சுட்டு வீழ்த்தி, வெற்றிவாகை சூடி, பதக்கமும் பெற்றுவிட்டார், எனவே இனிமேல் எதற்கு பயிற்சி என்பதே விமானப்படை தளபதி அர்ஜீன் சிங்கின் கேள்வியின் நோக்கம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :