'ரொஹிஞ்சாக்கள் மீதான தாக்குதல் ஒரு இனச்சுத்திகரிப்பு'

'ரொஹிஞ்சாக்கள் மீதான தாக்குதல் ஒரு இனச்சுத்திகரிப்பு'

மியான்மரில் ரொஹிஞ்சா முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் இனச் சுத்திகரிப்புக்கான ஒரு உதாரணம் போன்று தென்படுவதாக ஐநாவின் மனித உரிமைகள் ஆணைக்குழு தலைவர் ஷெயித் ராத் அல் ஹுசைன் கூறியுள்ளார்.

அந்த இடத்துக்கு செல்ல ஐநா புலனாய்வாளர்கள் தடுக்கப்பட்டுள்ளனர்.

இருவாரங்களுக்கு முன்னதாக இந்த நெருக்கடி ஆரம்பித்தது முதல் இதுவரை மூன்று லட்சத்துக்கும் அதிகமான அகதிகள் எல்லை கடந்து வங்கதேசத்துக்கு ஓடியுள்ளனர்.

புதிதாக வரும் லட்சக்கணக்கான அகதிகளை பதிவதற்கான நடவடிக்கைகளை வங்கதேச அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.

தங்குமிடம் மற்றும் மனித நேய உதவிகளை அகதிகளுக்கு வழங்குவதில் தாம் பெரும் சவாலை எதிர்கொள்வதாக வங்கதேசம் கூறுகிறது.

அதேவேளை வடக்கு ரக்கைன் மாநிலத்துக்கு சென்ற பிபிசி செய்தியாளர் ஜொனதன் ஹெட், அங்கிருந்து ரொஹிஞ்சாக்களை விரட்டியடிப்பதற்கான நடவடிக்கையின் ஆதாரங்களை தான் பார்த்ததாக கூறுகிறார்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :