நிமிடங்களை உங்களால் அளக்க முடியுமா? புதிர் - 16
உங்கள் மூளையை தயார்படுத்தி, இந்த புதிரைக் கண்டுபிடியுங்கள்.நீங்கள் அசத்துவீர்கள் என்று நம்புகிறோம்!
வாழ்த்துக்கள்!
பட மூலாதாரம், Getty Images
மூளைக்கு வேலை கொடுக்கும் பிபிசியின் புதிர் தொடரின் 16-ஆம் பகுதி இது.
உங்கள் மூளைக்கு பயிற்சி கொடுங்கள்
புதிர் -16
இரண்டு ஃபூஸ்களை (fuse) மட்டும் பயன்படுத்தி, அதனை வத்திக் குச்சிகளை வைத்து கொளுத்தி நீங்கள் சரியாக 45 நிமிடங்களை அளக்க வேண்டும்.
அந்த ஃபூஸ்கள் பல பொருட்களால் ஆனது. எனவே, அதன் வெவ்வேறு பகுதிகளும் வெவ்வேறு நேரத்தில் எரிந்து முடிக்கும்.
ஒரு ஃபூஸ் ஒரு மணி நேரத்தில் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனை வரை எரிந்து முடிக்கும்.
இப்போது யோசியுங்கள் நீங்கள் எவ்வாறு 45 நிமிடங்களை அளப்பீர்கள்?
விடை:
ஒரு ஃபூஸின் இரண்டு முனையையும் ஒரே நேரத்தில் பற்ற வையுங்கள்; இரண்டாம் ஃபூஸின் ஒரு முனையை மட்டும் பற்ற வையுங்கள்.
முப்பது நிமிடத்தில் ஒரு ஃபூஸ் எரிந்து முடித்த அடுத்த தருணத்தில் மற்றொரு ஃபூஸையும் கொளுத்துங்கள் (இல்லையேல் அது அடுத்த முப்பது மணி நேரம் வரை எரியும்).
கொளுத்திய சமயத்திலிருந்து எரிந்து முடிக்க அந்த இரண்டாம் ஃபூஸிற்கு 15 நிமிடங்கள் பிடிக்கும். எனவே, இதற்கு மொத்தமாக 45 நிமிடங்கள் எடுக்கும்.
இந்த புதிர் ப்ரைண்டென்.காமால் ( BrainDen.com) உருவாக்கப்பட்டது.
முந்தைய புதிர்கள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :