கடிகாரமும், அதன் பிம்பமும் எத்தனை முறை ஒத்து போகும்? புதிர் - 17

உங்கள் மூளையைக் கசக்கி, இந்த புதிரைக் கண்டுபிடியுங்கள்.நீங்கள் அசத்துவீர்கள் என்று நம்புகிறோம்!

வாழ்த்துகள்!

பட மூலாதாரம், Getty Images

மூளைக்கு வேலை கொடுக்கும் பிபிசியின் புதிர் தொடரின் 17-ஆம் பகுதி இது.

காணொளிக் குறிப்பு,

உங்கள் மூளைக்கு பயிற்சி கொடுங்கள்

புதிர் -17

பெக்கியிடம் 24மணி நேர டிஜிட்டல் கடிகாரம் ஒன்று இருந்தது. அது கண்ணாடி மேசை ஒன்றின் மேல் வைக்கப்பட்டிருந்தது.

பெக்கி 13:08 மணிக்கு கடிகாரத்தை பார்க்கும்போது அதன் பிம்பம் கண்ணாடி மேசையில் ஒரே மாதிரியாக தெரிந்தது. ஆனால், ஒரு நிமிடத்திற்கு முன்னதாக அவ்வாறு இல்லை.

அந்த 24 மணி நேர கடிகாரத்தில் எத்தனை முறை அந்த டிஜிட்டல் கடிகாரமும் அதன் பிம்பமும் ஒரே மாதிரியாக தெரியும்?

விடை: 96

அந்த டிஜிட்டல் கடிகாரத்தின் பிம்பத்தில் ஒரே மாதிரியாக தெரியக்கூடிய நான்கு எண்கள் 0,1,3,8. எனவே அந்த 24 மணி நேர கடிகாரத்தில் இந்த எண்களை கொண்ட மணி எப்போது வரும் என்பதை கண்டறிய வேண்டும்.

0 அல்லது 1 ஆகிய முதல் எண்ணாக இருக்க வாய்ப்புகள் உள்ளன.

0,1,3,8 ஆகிய எண்கள் இரண்டாம் எண்ணாக இருக்க வாய்ப்புகள் உள்ளன.

0,1 அல்லது 3 ஆகிய எண்கள் மூன்றாம் எண்ணாக இருக்க வாய்ப்புகள் உள்ளன.

0, 1, அல்லது 8 ஆகிய எண்கள் நான்காம் எண்ணாக இருக்க வாய்ப்புகள் உள்ளன.

மொத்த எண்ணிக்கையை கண்டறிய, அந்த ஒவ்வொரு எண்களுடன் அதற்கான வாய்ப்புகளுக்கான எண்ணிக்கையை பெருக்க வேண்டும்.

எனவே, கடிகாரமும் அதன் பின்பமும் ஒன்றாக அமையும் எண்ணிக்கையை கண்டறிய: 2 x 4 x 3 x 4 = 96

இந்த புதிர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டது.

முந்தைய புதிர்கள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :