தொடரும் இர்மா சூறாவளி பாதிப்பு: மின்சாரமில்லாத ஃபுளோரிடா மருத்துவமனையில் 8 பேர் பலி

பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இர்மா சூறாவளி வீழ்ந்த சில நாட்களுக்கு பிறகு அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் மின்சார வசதி துண்டிக்கப்பட்ட ஒரு மருத்துவமனையில் 8 பேர் பலியாகியுள்ளனர்.

தொடரும் 'இர்மா சூறாவளி' பாதிப்பு: ஃபுளோரிடா மருத்துவமனையில் 8 பேர் பலி

பட மூலாதாரம், WFOR-TV

புதன்கிழமையன்று இந்த வளாகத்தில் இருந்த 115 பேரை போலீசார் வெளியேற்றினர்.

மருத்துவமனையில் இருந்த குளிர்சாதன இணைப்புகள் மற்றும் மின்சார இணைப்பு இர்மா சூறாவளி துண்டிக்கப்பட்டுள்ளன.

இர்மா சூறாவளி தாக்குதலுக்கு பிறகு ஃபுளோரிடா, ஜார்ஜியா மற்றும் கரோலினா போன்ற மாநிலங்களில் 10 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர்.

ஃபுளோரிடா மாகாணத்தை கடுமையாக பாதித்துள்ள இர்மா சூறாவளியால் அமெரிக்காவில் 24 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக, கரீபியன் தீவுகளில் இர்மா சூறாவளியால் கிட்டத்தட்ட 40 பேருக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

பட மூலாதாரம், AFP

கடந்த வாரத்தில் இர்மா சூறாவளியின் மையம் ஃபுளோரிடாவின் பெருநிலப்பரப்பை கடுமையாக தாக்கியது.

இந்த சூறாவளி காற்றின் உயரம் 15 அடி உயரம் வரை இருக்கக்கூடும் என்று முன்னரே எச்சரிக்கைகள் விடப்பட்ட நிலையில், இந்த சூறாவளி ஃபுளோரிடா மாகாண மேற்கு கரையில் உள்ள நேப்பல்ஸ் பகுதிக்கு தெற்கே கடுமையான சேதங்களை உருவாக்கியுள்ளது.

ஃபுளோரிடாவின் மேற்கு கரையில் உள்ள மார்கோ தீவுகளில் இர்மா சூறாவளியின் மையம் தாக்கியது.

ஃபுளோரிடா மாநிலத்தில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில்,மியாமி நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கின.

பிற செய்திகள் :

மனம் திறந்து கட்டியணைக்கும் பிரதமர் மோதி

காணொளிக் குறிப்பு,

மனம் திறந்து கட்டியணைக்கும் பிரதமர் மோதி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :