அமெரிக்காவில் ஹார்வி புயலுக்குப் பிறகு கரை ஒதுங்கிய கோரைப் பல் உயிரி

ஹார்வி புயலுக்குப் பிறகு அமெரிக்காவின் டெக்சாஸ் கடற்கரையில் ஒதுங்கிய கோரைப் பற்கள் உள்ள மர்மமான கடல் உயிரி ஒன்றைக் கண்டறிந்துள்ளனர்.

டெக்சாஸ் கடற்கரையில் கண்டறியப்பட்ட கடல் உயிரி.
படக்குறிப்பு,

டெக்சாஸ் கடற்கரையில் கண்டறியப்பட்ட கடல் உயிரி.

டெக்சாஸ் நகரக்கடற்கரையில் அழுகிக் கொண்டிருந்த இந்த உயிரியை கண்ட பிரீத்தி தேசாய் என்பவர் அதன் படத்தை டிவிட்டரில் வெளியிட்டு அது என்ன உயிரி என்று கேட்டு ஒரு பதிவிட்டார்.

ட்விட்டரில் அந்தப் பதிவு உயிரியலாளரும், விலாங்கு மீன் ஆய்வாளருமான டாக்டர் கென்னத் டிகேவுக்கு அவரது நண்பர் ஒருவரால் அனுப்பப்பட்டது. அது 'கோரைப்பல் பாம்பு விலாங்கு' (fangtooth snake-eel) என்று தாம் நினைப்பதாக அவர் தெரிவித்தார். அது தோட்ட விலாங்காகவோ, காங்கர் விலாங்காகவோ இருக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.

இந்த மூன்று உயிரிகளுமே பெரிய கோரைப்பற்கள் உடையவை என்றும் டெக்சாஸ் கடலோரப் பகுதியில் காணப்படுகிறவை என்றும் அவர் தெரிவித்தார்.

ஏன் இந்த கடல் உயிரி கரைக்கு அடித்துவரப்பட்டது என்பதற்கான காரணத்தை ஹார்வி சூறாவளி பற்றிய ஆய்விலேயே தெரியும் என்றார் அவர்.

கோரைப்பல் பாம்பு விலாங்கு அல்லது தந்த விலாங்கு என்று அறியப்படும் இந்த உயிரி மேற்கு அட்லாண்டிக் பெருங்கடலில், 30 முதல் 90 மீட்டர் ஆழம் வரையில் உள்ள நீரில் காணப்படும்.

"இது முற்றிலும் எதிர்பாராதது. வழக்கமாக கடற்கரையில் பார்க்கிற ஒன்றல்ல இது. ஆழ்கடலில் இருந்து கரைக்கு அடித்துவரப்பட்டதாக இது இருக்கும் என நான் நினைக்கிறேன்," என்றார், சூறாவளியின் சேதங்களை கடற்கரையில் மதிப்பீடு செய்துகொண்டிருந்த பிரீத்தி.

படக்குறிப்பு,

டெக்சாஸ் கடற்கரையில்.

இது என்ன என்பதைக் கண்டறிகிற ஆர்வமே என் முதல் எதிர்வினை என்றார் அவர். நிறைய விஞ்ஞானிகள் ட்விட்டர் பயன்படுத்துவதால் அதில் தமது படங்களை பதிவேற்றியதாகக் கூறும் பிரீத்தி தமது நண்பர் ஒருவர் திகேவைத் தொடர்புகொண்டதாகக் கூறினார்.

நிறைய விஞ்ஞானிகள், ஆய்வாளர்களை நான் டிவிட்டரில் தொடர்கிறேன். விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றை அடையாளம் காண்பதில் உலகத்தைப் பற்றிய கேள்விக்குப் பதில் சொல்வதில் இந்த விஞ்ஞானிகள் உதவிகரமாக இருப்பதாக அவர் கூறினார்.

இயற்கை தமது கடமையைச் செய்யட்டும் என்று விடுவதாகக் கூறிய பிரீத்தி அந்த உயிரியை கடற்கரையிலேயே விட்விட்டார்.

பிற செய்திகள்:

ஆப்பிளின் விலை மதிப்புமிக்க ஐஃபோன் X-ல் என்னென்ன வசதிகள் இருக்கின்றன?

காணொளிக் குறிப்பு,

ஐஃபோன் X

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :