மலேசிய கல்விக்கூடத்தில் தீ : 24 மாணவர்கள் பலி

மலேசிய கல்விக்கூடத்தில் தீ : 24 மாணவர்கள் பலி

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் மதரஸா ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருபத்து நான்குபேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் அங்கீகரிக்கப்படாத பள்ளிகளில் இப்படியான இருநூறு தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் ட்விட்டர் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். வருங்காலத்தில் இதுபோன்ற விபத்துகளைத் தவிர்ப்பதற்காக, இது குறித்த விசாரணை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று அந்நாட்டு அமைச்சர் லோக பால மோகன் ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.

மதக் கல்வி அளிக்கும், வரைமுறைப்படுத்தப்படாத இத்தகைய தனியார் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அந்நாட்டு அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் இப்பள்ளிகளில் 200க்கும் மேலான தீ விபத்துகள் நடந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :