பிபிசி தமிழில் இன்று...

பிபிசி தமிழில் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

கதாசினி

பட மூலாதாரம், NASA/JPL-CALTECH/SSI/JASON MAJOR

வளையம் சூழ்ந்த சனிக்கோளைப் பற்றிய மனித குலத்தின் புரிதலை மேம்படுத்த உதவிய அமெரிக்காவின் காசினி விண்கலன் திட்டமிட்டபடி வெள்ளிக்கிழமை தம்மை அழித்துக்கொண்டது.

மூன்று தோழிகள் மூன்று நாட்கள் அதிலிருந்து விடுவித்து ஒரு பயணத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இந்தப் பயணத்தின் முடிவில் எதிர்பாராத திருப்பங்கள் நடக்கின்றன.

சினிமா விமர்சனம் வாசிக்க: சினிமா விமர்சனம்: மகளிர் மட்டும்

பட மூலாதாரம், Getty Images

லண்டனின் தென்மேற்குப் பகுதியில் உள்ள புல்ஹாமில் சுரங்க ரயிலில் வெடிச்சம்பவம் நடைபெற்றதாகவும், அதை தீவிரவாத நடவடிக்கையாகக் கருதுவதாகவும் ஸ்காட்லாந்து யார்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காவத்தமுனையிலும், அம்பாரை மாவட்டத்தில் கல்முனை , சாய்ந்தமருது மற்றும் நிந்தவூர் உள்ளிட்ட இடங்களிலும் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டங்களிலும், பேரணிகளிலும் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

பட மூலாதாரம், AAMIR QURESHI

"கௌரவக் கொலை" காரணமாக கொல்லப்பட்டு இருக்கலாம் என அஞ்சப்படும், பாகிஸ்தானின் பதின்ம வயது ஜோடியின் உடல்களில் உள்ள காயங்கள், அவர்கள் அதிக மின்சார பாய்ச்சலுக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரியவந்துள்ளதாக போலிசார் தெரிவிக்கின்றனர்.

தமிழக முகாமில் வசிக்கும் ரோஹிஞ்சா அகதிகள்

காணொளிக் குறிப்பு,

தமிழகத்தில் வாழும் ரோஹிங்ஞாக்கள்

இந்திய அமைச்சர் ஒருவர் இந்த அகதிகளை வெளியேற்ற வேண்டும் என்று தெரிவித்த கருத்து பற்றி இவர்கள் அறிந்திருக்கவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :