ஹரியாணா சாமியாரை தப்பிக்கவைக்க முயன்றதாக நான்கு போலீசார் கைது
பாலியல் வல்லுறவு வழக்கில் கடந்த மாதம் 20 ஆண்டுகள்சிறை தண்டனை விதிக்கப்பட்ட "தேரா சச்சா செளதா" அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கை தப்பிக்கவைக்க முயற்சி செய்ததற்காக நான்கு காவலர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

பட மூலாதாரம், AFP
குர்மீத் ராம் ரஹீம் சிங்.
மூன்று காவலர்கள் ஹரியானா மாநிலத்தின் வடக்கு பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் பிபிசியிடம் பேசிய காவல்துறை மூத்த அதிகாரி சாவ்லா தெரிவித்தார்.
குர்மீத் தப்பி செல்வற்காக தீட்டப்பட்ட ஒரு திட்டத்தில் இந்தப் போலீசார் இருந்திருக்கிறார்கள் என்று தெரிவித்த காவல்துறை மேற்கொண்டு விவரம் தரவில்லை.
15 ஆண்டு கால விசாரணை முடிவில் குர்மீத் ராம் ஹரீம் சிங்கை "குற்றவாளி" என்று ஹரியானாவின் பஞ்ச்குலாவில் உள்ள நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பு அளித்தது.
அதன் பின், நடந்த வன்முறை சம்பவங்களில் பஞ்ச்குலா நகரத்தில் மட்டும் 38 பேர் உயிரிழந்தனர். இவை உலகம் முழுவதும் தலைப்பு செய்தி ஆனது.
கைது செய்யப்பட்ட இந்த நான்கு பேரும் குர்மீத் ராம்ரஹீம் சிங்கின் பாதுகாவலர்களாக அரசால் நியமிக்கப்பட்டவர்கள்.
ஆனால், உள்ளூர் ஊடகங்கள், இந்த நான்கு பேரும் குர்மீத்தின் பக்தர்களாக காலப்போக்கில் மாறிவிட்டார்கள் என்று கூறுகின்றன.
தீர்ப்பளிக்கப்பட்ட அன்று குர்மீத்துக்கு பாதுகாவலாக இந்த காவலர்கள்தான் நீதிமன்றத்துக்கு வந்தார்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்