பிபிசி தமிழில் இன்று... மாலை 6 மணி வரை

பிபிசி தமிழில் இன்று சனிக்கிழமை மாலை 6 மணி வரை வெளியாகிய முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகின்றோம்.

ஹரியாணா சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்

பட மூலாதாரம், HONEYPREETINSAN.ME

ஹரியாணா சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங், பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளி என ஹரியானா நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது அவருடன் இருந்த அவரது வளர்ப்பு மகள் எனச் சொல்லப்பட்ட ஹனிப்ரீத் ஹன்சான் தற்போது தலைமறைவாக இருக்கிறார்.

பட மூலாதாரம், BBC WORLD SERVICE

சுமார் 200 கஜ தூரத்தில் இருந்து 30 எம்.எம் கேனான் துப்பாக்கியால் விமானத்தின் வலப்புறத்தை நோக்கி சுட்டார் ட்ரேவர். அடுத்த நொடியே, சேபரின் வலப்புறமிருந்த இறக்கை கீழே விழத் தொடங்கியது. தொடர்ந்து விமானமும் கட்டுப்பாட்டை இழந்து கீழ் நோக்கி பாய்ந்தது. இது 1965 ஆம் ஆண்டு போரின்போது, இந்தியாவால் வீழ்த்தப்பட்ட முதல் விமானம். அன்றே ட்ரேவர் கீலருக்கு வீர் சக்ர விருதை அறிவித்தது இந்திய அரசு.

பட மூலாதாரம், Reuters

அமெரிக்க ராணுவ துருப்புகளுக்கு இணையான ராணுவக் கட்டமைப்பை நிறுவுவதுதான் தமது இலக்கு என்று வட கொரிய தலைவர் கிம் ஜோங் - உன் கூறியதாக கொரிய அரசு செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ செய்தி வெளியிட்டு இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images

பாலியல் துஷ்பிரயோகம், 16 வயதுக்கு கீழ் கர்ப்பம் தரித்தல் ( பாலியல் வன்முறை), 12-ஆம் வாரம் கருவில் தீவிர குறைப்பாடு போன்ற சந்தர்ப்பங்களில் கருக்கலைப்புக்கு அனுமதியளிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வர மருத்துவர்கள் குழுவொன்று பரிந்துரை செய்துள்ளது.

பட மூலாதாரம், படத்தின் காப்புரிமைBODLEIAN LIBRARIES

புள்ளி போன்ற ஒரு வடிவத்திலிருந்து பரிணமித்த பூஜ்யக் குறியீடு, பக்சாலி சுவடி நெடுகிலும் பல இடங்களில் காணக்கிடைக்கிறது.

இந்தியாவில் வாழும் ரோஹிஞ்சா அகதிகள் அனைவரையும் இந்தியா வெளியேற்றும் என்று இந்திய அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த கருத்து பற்றிய பெரிய அளவு விழிப்புணர்வு இல்லாத நிலையிலேயே சென்னையில் உள்ள ரோஹிஞ்சா அகதிகள் வாழ்கிறார்கள்.

பட மூலாதாரம், EPA

குர்மீத் தப்பி செல்வற்காக தீட்டப்பட்ட ஒரு திட்டத்தில் இந்தப் போலீசார் இருந்திருக்கிறார்கள் என்று தெரிவித்த காவல்துறை மேற்கொண்டு விவரம் தரவில்லை.

பட மூலாதாரம், Getty Images

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியடைவதால் கிடைக்கும் பயனில் 75 முதல் 80 சதவிகிதம் அரசுக்கும், எஞ்சிய 20 முதல் 25 சதவிகிதம் வரை மட்டுமே மக்களுக்கும் செல்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :