மரங்களை கொண்டு பிரம்மாண்ட தொழில்நுட்ப குறியீட்டை உருவாக்கும் சீன கிராமம்

சீன பிரமை: மரங்களைக் கொண்டு பிரம்மாண்ட QR குறியீட்டை உருவாக்கும் சீன கிராமம்

பட மூலாதாரம், Xinhua/REX/Shutterstock

முதல் பார்வையில், இது சில பெரிய இடைவெளிகளைக் கொண்ட ஆங்கிலேய நாட்டு நேர்த்தியான தோட்ட வடிவம் எனக் கருதலாம்.

ஆனால் ஒரு தொழில்நுட்ப கண் கொண்டவர்கள், உடனடியாக அதன் பச்சை வடிவமைப்பை பார்த்து இது ஒரு பெரிய QR குறியீடு என்பார்கள்.

இந்த உயர் தொழில்நுட்ப பார்கோடுகள் சீனாவில் ஸ்மார்ட்போன் வழியாக பணம் செலுத்துவதற்கு பிரபலமான வழியாக உள்ளது.

வடக்கு ஹெபே மாகாணத்தில் உள்ள ஷிலின்சுவா கிராமம், தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள ஒரு புதிய முயற்சியாக மரங்களைக் கொண்டு QR கோடுகளை உருவாக்கியுள்ளது.

இந்த வடிவமைப்பு 130,000 சீன ஜூனைப்பர் மரங்களால் அமைக்கப்பட்டுள்ளது. ஃபோன் அல்லது டேப்லட்டைக் கொண்டு, அதற்கு மேல் பகுதியிலிருந்து அதை ஸ்கேன் செய்ய முடியும்.

எவ்வளவு உயரத்திலிருந்து ஸ்கேன் செய்ய வேண்டும் அல்லது அந்த உயரத்துக்கு எப்படிச் செல்வது என்பவை பற்றியெல்லாம் தெளிவான தகவல் இல்லை. ஆனால் குறியீட்டை வெற்றிகரமாக பதிவு செய்யும் பார்வையாளர்கள், வி-சேட் என்ற சீன சமூக வலைத்தளத்தின் மூலம் அந்த கிராமத்தின் சுற்றுலா கணக்குடன் இணைக்கப்படுவார்கள்.

அதன் பரந்த வடிவமைப்பு ஒவ்வொரு பக்கத்திலும் 227 மீட்டர் (744 அடி) மற்றும் அதற்கிடையில் இருக்கும் மரங்கள் 80 செ.மீ மற்றும் 2.5 மீ உயரத்தில் இருக்கும் என்று, சவுத் சீனா மார்னிங் போஸ்ட் என்ற பத்திரிக்கையின் பதிவுகள் தெரிவிக்கின்றன.

பட மூலாதாரம், Xinhua/REX/Shutterstock

ஷிலின்சுவா, 2015- இல் ஹெபேயின் மிக அழகான கிராமம் என்று பெயர் பெற்று, அந்த மாகாண அரசின் 1.1 மில்லியன் யுவான் வளர்ச்சி மானியத்தைப் பெற்றது.

QR குறியீடுகள் எப்படி வேலை செய்யும்?

சீன வாடிக்கையாளர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் QR குறியீடுகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக விரைவான பணம் செலுத்துவதற்கு அவர்கள் இதனை பயன்படுத்துகின்றனர். கருப்பு மற்றும் வெள்ளை சதுரங்களின் ஒரு வடிவத்திலிருந்து தயாரிக்கப்பட்ட சிறிய குறியீடுகள் பல தகவல்களை சேகரித்துக்கொள்ளும். உதாரணமாக, ஒரு பொருளின் விலை, அல்லது ஒரு உணவுக்கான சமையல் குறிப்பு போன்றவை ஆகும்.

உணவக சிப்பந்திகள் சில இடங்களில் தங்கள் சட்டைகளில் QR பட்டைகளைப் பொருத்தியிருப்பதை காணலாம், எனவே மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள் இதன் மூலம் ஸ்கேன் செய்து அவர்களுக்கு டிப்ஸ் வழங்கமுடியும்.

மேலும் பிச்சைக்காரர்களும் குறியீடுகளை பொருத்திய பட்டைகளைக் காண்பிப்பது நன்கொடைகளை ஊக்குவிக்கும் விதமாக உள்ளது.

பிரம்மாண்ட QR குறியீடுகள், வர்த்தகத்தை ஊக்குவிக்கும் யுக்தியாக முன்பு பயன்படுத்தப்பட்டன.

பிற செய்திகள் :

காணொளிக் குறிப்பு,

பர்மா

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :