சர்தார் சரோவர் அணை திறப்பு: அணை குறித்த முக்கிய அம்சங்கள், நன்மைகள், சர்ச்சைகள்

தனது 67-ஆவது பிறந்தநாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) குஜராத்தில் நர்மதா அணையின் குறுக்கே சர்தார் சரோவர் அணையை இந்திய பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார்.

சர்தார் சரோவர் அணை திறப்பு

பட மூலாதாரம், TWITTER @PMOIndia

படக்குறிப்பு,

சர்தார் சரோவர் அணை திறப்பு

சர்தார் சரோவர் அணை இந்தியாவின் வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய திட்டமாக இருக்கலாம். ஆனால், இது இந்தியாவின் முதல் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேருவின் கனவு திட்டமாகும்.

இந்நிலையில், சர்தார் சரோவர் அணை குறித்த 5 குறிப்பிடத்தக்க அம்சங்களை இங்கே காணலாம்.

பட மூலாதாரம், SAM PANTHAKY/AFP/Getty Images

5 முக்கிய அம்சங்கள்:

 • சர்தார் சரோவர் அணை இந்தியாவின் மிகப்பெரிய நீர் வளத் திட்டம் ஆகும்.
 • மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் ராஜஸ்தான் போன்ற முக்கிய மாநிலங்களுடன் இந்த திட்டம் இணைக்கப்பட்டுள்ளது.
 • தண்ணீர் வெளியேற்றும் திறனைப் பொறுத்தவரை, இது உலகின் மூன்றாவது பெரிய அணையாகும்.
 • 532 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த நர்மதா முக்கிய கால்வாய், உலகிலேயே நீளமான பாசன கால்வாய் ஆகும்.
 • சர்தார் சரோவர் அணை இந்தியாவில் மூன்றாவது உயரமான அணை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இந்த அணையின் உயரம் உயர்த்தப்பட்டது.

அணையால் கிடைக்கும் நன்மைகள்:

 • குஜராத், ராஜஸ்தான் மற்றும் மஹாராஷ்டிராவில் வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளின் பாசனத்திற்கு சர்தார் சரோவர் அணை நீரை பயன்படுத்த முடியும்.
 • ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் அதிகமான மக்கள் நர்மதா நீரில் குடிக்க தண்ணீர் கிடைக்கும்.
 • 1450 மெகாவாட் மின்சார உற்பத்தி இலக்கு சர்தார் சரோவார் திட்டத்திலிருந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 • இந்த அணையால் அருகில் உள்ள வனவிலங்கு சரணாலயங்கள் பலனடையும்.

பட மூலாதாரம், AFP/Getty Images

திட்டம் தொடர்பான சர்ச்சைகள் :

 • மேதா படேகரின் தலைமையின்கீழ் நர்மதா பச்சோ ஆந்தோலன் இயக்கம் சர்தார் சரோவர் அணைக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தது.
 • இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த திட்டத்தில் இருந்து அகற்றப்படுவார்கள் என்றும், சுற்றுச்சூழல் சூழலை பாதிக்கும் என்றும் அந்த இயக்கம் கூறியது.
 • பெரிய அணைகளின் கட்டுமானம் பூகம்பத்தின் ஆபத்தை அதிகரிக்கக்கூடும் என்று சில விஞ்ஞானிகள் வாதிட்டனர்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :