2006க்கு பிறகு முதல்முறையாக தேர்தலை நடத்த தயாராக இருப்பதாக ஹமாஸ் அறிவிப்பு

ஹமாஸ்

பட மூலாதாரம், AFP

காசாவை ஆட்சி செய்யும் குழுவைக் கலைக்கத் தயாராக இருப்பதாகவும், கடந்த 2006-ம் வருடத்திற்கு பிறகு முதல் முறையாக பொதுத்தேர்தல் நடத்த தயார் என்றும் அறிவித்திருக்கிறது பாலஸ்தீன தீவிரவாதக் குழுவான ஹமாஸ்.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலான நடக்கும் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்தின் அடிப்படையில் தனது எதிரியான ஃபத்தாவுடன் மேலும் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக ஹமாஸ் தெரிவித்திருக்கிறது.

முன்னதாக ஹமாஸின் பிரதிநிதிகள் மூத்த எகிப்து அதிகாரிகளை கெய்ரோவில் சந்தித்திருக்கிறார்கள். ஹமாஸின் இந்த நடவடிக்கைகள் நேர்மறையாகவும் உறுதியளிப்பதாகவும் இருப்பதாக ஃபத்தாவின் துணைத்தலைவர் எச்சரிக்கையோடு முதல் பதிலை தந்திருக்கிறார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த பயங்கர மோதலில் காசாவை விட்டு வெளியேற்றப்பட்டது ஃபத்தா. காசா மற்றும் மேற்கு கரை பகுதிகளில் ஒற்றுமையான அரசாங்கத்தை அமைக்க இரண்டு பிரிவுகளால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளன.

ஹமாஸின் ஆர்வத்துக்கு எகிப்தில் உள்ள ஃபக்தா பிரதிநிதிகளிடம் இருந்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ பதிலும் வரவில்லை.

ஆனால், துணைத்தலைவர் மகமூத் அல் அலௌல் இந்தச் செய்தியை எச்சரிக்கையோடு வரவேற்றதோடு, எல்லை மீறல்களுக்கான கட்டுப்பாடு மற்றும் சமூக நல்லிணக்கம் உள்ளிட்ட மற்ற விஷயங்களுக்கும் தீர்வு காணப்படவேண்டும் என்றார்.

பட மூலாதாரம், Reuters

கடந்த 2006 தேர்தலில் ஹமாஸ் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் 2007-ல் நடந்த மோதல்களுக்கு பிறகு ஹமாஸின் பிரதமரை அந்நாட்டின் அதிபர் மஹமூத் அப்பாஸ் பதவிநீக்கம் செய்தார். ஆனாலும் ஹமாஸ் குழு தொடர்ந்து காசாவை ஆட்சி செய்தது. அதே வேளையில் இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் வராத மேற்குக்கரையில் தொடர்ந்து பாலஸ்தீன அதிகாரத்தை செயல்படுத்தி வருகிறது ஃபத்தா.

அப்பாஸ் அதிகாரத்துக்குள் தனது பாதுகாப்பு படையை நடத்த ஹமாஸ் தயாராக இருக்கிறதா என்பது குறித்து தெளிவுபடுத்தப்படவில்லை என பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2007ல் இருந்து காசா தீவிரவாதிகளிடம் இருந்து தாக்குதல்களை தடுக்கும் விதமாக காசாவில் ஒரு நிலப்பகுதி மற்றும் கடல் பகுதியில் முற்றுகையிட்டுள்ளன ஈராக் மற்றும் இஸ்ரேல் நாடுகள்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :