கார் அச்சில் சிக்கி 16 கிலோ மீட்டர் பயணித்து உயிர்பிழைத்த 'குவாலா'

குவாலா

பட மூலாதாரம், Reuters

ஃபோர் வீல் ட்ரைவ் வாகனம் ( நான்கு சக்கரங்களுக்கும் இயந்திர சக்தி தரப்பட்டு, அனைத்து வகை நிலப்பரப்பிலும் செல்லக்கூடிய வாகனம்) ஒன்றின், அச்சில் சிக்கிக்கொண்டிருந்த ஒரு குவாலா என்ற ஆஸ்திரேலியக் கரடி, அதிலிருந்து மீட்கப்பட்ட பின்னர் ஆஸ்திரேலியாவின் காட்டுப்பகுதியில் விடப்பட்டது.

கடந்த வார இறுதியில் அடிலெய்ட் நகருக்கு அருகே உள்ள மலைகளில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், வாகனத்தின் சக்கர வளைவில் அந்த பெண் குவாலா ஏறிவிட்டது.

அதிர்ச்சியடைந்து அந்தக் குவாலா கதறிக் கொண்டிருந்தது. 16 கிலோ மீட்டருக்கு கார் பயணத்தநிலையில் அந்தக் குவாலாவின் குரலைக் கேட்டபின்னர்தான், வாகன ஓட்டுநர் அது அங்கு சிக்கிக் கொண்டிருப்பதை அறிந்து கொண்டார்.

இறுதியில், மீட்புப்பணியினர், சக்கரத்தை அகற்றிவிட்டு பெண் குவாலாவை விடுவித்தனர்.

பட மூலாதாரம், Reuters

"நான் அந்த பெண் கோலாவின் எரிந்த ரோமத்தை நுகர முடிகிறது," என்று, விலங்கு மீட்பு அறக்கட்டளையிலிருந்து, ஜேன் பிரிஸ்டர்,ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

ஒரு சில நாட்கள் கூண்டில் ஓய்வெடுத்து, உணவு உண்ட பிறகு, அந்த மிருகம் காட்டில் விடப்பட்டது.

குவாலா உயிரினங்கள் ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்டவை மற்றும் "பாதிக்கப்படக்கூடிய இனங்கள்'' என வகைப்படுத்தப்பட்டவையும் ஆகும்.

ஆஸ்திரேலிய குவாலா பவுண்டேஷனின் கூற்றுப்படி, காட்டுப்பகுதியில் ஒரு லட்சத்துக்கும் குறைவான குவாலாக்களே உள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :