இர்மா சூறாவளிக்கு அடுத்து 'மரியா சூறாவளி' : அச்சத்தில் கரீபியன் தீவுகள்

கரீபியன் தீவுகளை சேர்ந்த லீவர்ட் தீவுகளை அச்சுறுத்தும் வகையில் மரியா என்ற சூறாவளி அத்தீவுகளை நெருங்கி கொண்டிருக்கிறது.

பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்ட அமெரிக்க ராணுவம்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்ட அமெரிக்க ராணுவம்

மரியா சூறாவளி பெரும் சூறாவளியாக உருவெடுக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் வகை சூறாவளியாக வகைப்படுத்தப்பட்ட இந்த மரியா சூறாவளி அடுத்த 48 மணி நேரத்தில் படிப்படியாக வலுப்பெறும் என்றும், திங்கள்கிழமை இரவில் இந்த சூறாவளி லீவர்ட் தீவுகளை தாக்கும் என்று அமெரிக்க தேசிய சூறாவளி மையம் தெரிவித்துள்ளது.

மேலும், டோமானிக்கா, செயிண்ட் கிட்ஸ் மற்றும் செயிண்ட் மார்ட்டென் போன்ற இடங்களிலும் சூறாவளி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

கோப்புப் படம்

இர்மா சூறாவளியால் பாதிப்படைந்த கரீபியன் தீவுகள்

முன்னதாக, கடந்த இரன்டு வாரங்களுக்கு முன்பு கரீபியன் தீவுகளை கடுமையாக தாக்கி பாதிப்பு உண்டாக்கிய இர்மா சூறாவளியால் குறைந்தது 29 பேர் இறந்துள்ளனர்.

அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான இர்மா சூறாவளி முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் மிகவும் கடுமையான வேகத்தில் கரீபியன் தீவுகளை வடமேற்காக தாக்கியது.

கரீபியன் தீவுகளில் ஒன்றான பார்புடாவில் உள்ள 95 சதவீத கட்டடங்களும் இந்தச் சூறாவளியால் சேதமடைந்துவிட்டன. அந்தத் தீவில் குடியிருப்பதே சாத்தியமில்லாமல் போய்விட்டது.

பட மூலாதாரம், Getty Images

இந்த தீவை மறு கட்டமைப்பு செய்ய 100 மில்லியன் அமெரிக்க டாலர் செலவு பிடிக்கும் என ஆன்டிகுவா-பார்புடா நாட்டின் பிரதமர் கேஸ்டன் பிரௌனி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :