79 நாட்களில் மிதிவண்டியில் உலகத்தை சுற்றி சாதனை

மார்க் பீயுமண்ட்

பட மூலாதாரம், PA

பிரிட்டிஷ் மிதிவண்டி ஓட்டி ஒருவர் திங்கட்கிழமை, தனது உலக மிதிவண்டி சுற்று பயணத்தை எழுபத்து ஒன்பது நாட்களில் முடித்து ஒரு புதிய உலக சாதனையை படைக்கிறார்.

பிரபல எழுத்தாளர் ஜுல் வெர்னஸ் எழுதிய, "80 நாட்களில் உலக சுற்றும் பயணம்" என்ற புத்தகத்தின் மூலம் ஈர்க்கப்பட்ட மார்க் பீயுமண்ட் என்பவர், தனது உலக சுற்றுப் பயணத்தை ஒரு நாளைக்கு முன்னதாக பாரிஸில் முடிக்கவுள்ளார்.

அவர் ஒரு நாளைக்கு 380 கிலோமீட்டர் தூரம் பயணித்து, அதற்காக 16 மணி நேரம் வரை மிதிவண்டியில் இருந்து இந்த சுற்றுப்பயணத்தை நிறைவு செய்தார்.

பட மூலாதாரம், JEREMY SUTTON-HIBBERT

இது போன்ற ஒரு சைக்கிள் ஓட்டுதலில் உலக சாதனையை படைப்பது இது இரண்டாவது முறை. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு 194 நாட்களில் உலக சுற்றுப்பயணம் செய்த அவரது முந்தைய சாதனையை மற்றொரு சாதனயாளரால் முறியடிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அவர் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :