ரொஹிஞ்சாக்கள் குறித்த அறிக்கையை ஐநா வெளியிடவுள்ளது

ரொஹிஞ்சாக்கள் குறித்த அறிக்கையை ஐநா வெளியிடவுள்ளது

ரொஹிஞ்சா முஸ்லிகளுக்கு எதிராக மியான்மர் பாதுகாப்பு படையினர் செய்ததாக கூறப்படும் குற்றங்கள் குறித்து ஐநா அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளது.

நான்கு லட்சத்துக்கும் அதிகமான ரொஹிஞ்சாக்களை அருகே வங்கதேசத்துக்கு ஓடச் செய்த இராணுவ நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவர ஒரேயொரு இறுதி வாய்ப்புத்தான் இருப்பதாக அது அந்த நாட்டின் தலைவியான ஆங்சான் சூச்சியை எச்சரித்துள்ளது.

ஆங்சான் சூச்சி ஐநாவில் உரையாற்றவுள்ள தினத்துக்கு ஒரு தினம் முன்னதாக இந்த காலக்கெடு வந்துள்ளது. அழுத்தத்தில் இருக்கும் ஒரு அகதி முகாமில் இருந்து பிபிசி தரும் செய்தித் தொகுப்பு.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :