மீண்டும் சூறாவளியை எதிர்கொள்ளும் பிரிட்டிஷ் வர்ஜின் தீவுகள்

மீண்டும் சூறாவளியை எதிர்கொள்ளும் பிரிட்டிஷ் வர்ஜின் தீவுகள்

எர்மா சூறாவளியால் தாக்கப்பட்ட பிரிட்டிஷ் வர்ஜின் தீவுகளில் அதன் தாக்கத்தை கணிக்கும் முன்னரே மேலும் ஒரு வலுவான சூறாவளி தாக்குதலை எதிர்கொள்ளவுள்ளது.

எர்மா சூறாவளி கரீபியன் தீவுகளின் பெரும்பகுதியை தாக்கி ஒருவாரம் ஆகிறது. அதில் பிரிட்டிஷ் வர்ஜின் தீவு மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது.

அங்கு உதவிகள் சென்றடைய தொடங்கியுள்ள நிலையில், மேலும் துயரத்தை ஏற்படுத்தும் வகையில், அடுத்த சூறவாளி அப்பகுதியை தாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மணிக்கு நூற்றிபத்து மைல் வேகத்தில் நகர்ந்துவரும் மரியா சூறாவளி மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :