டிவிட்டரில் இணைந்ததால் விமர்சனத்துக்கு ஆளான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அணி

டிவிட்டரில்

பட மூலாதாரம், TWITTER / @CCYLCHINA

டிவிட்டரில் கணக்கொன்றை வைத்திருப்பது அரசியல் கட்சிகளுக்கு அத்தியாவசியமான ஒன்றாக இருக்கலாம். ஆனால், இது சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சரியாக பயன்படவில்லை.

சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவு தங்களுக்கான டிவிட்டர் கணக்கொன்றை "நான் இங்கே இருக்கிறேன்" என்னும் ஒரு வாசகத்துடன், கம்யூனிஸ்ட் கார்ட்டூன் முயல்களை கொண்ட படத்தையும் சேர்த்து கடந்த வெள்ளியன்று வெளியிட்டது.

"கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவின் வேலை, செயற்பாட்டை பற்றிய தகவல்கள் மற்றும் பொதுவான இளைஞர் குறித்த முக்கிய செய்திகளையும் அறிந்து கொள்ளலாம்" என்று அக்கணக்கின் முகப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த டிவிட்டர் பக்கம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து, சீன மொழியில் நாட்டுப்பற்றை வெளிக்காட்டும் வகையில் 1931ம் ஆண்டு நடந்த ஜப்பானிய படையெடுப்பின் ஆண்டு தினம் மற்றும் அரசு ஊடகங்களின் தொடர்புடைய கட்டுரைகளின் இணைப்புகள் அளிக்கப்பட்டன.

ஆனால், சீனாவில் இணைய பயன்பாடு குறித்து கடுமையான குறித்த சட்ட திட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில் அனைத்தையையும் மீறி தொடங்கப்பட்டுள்ள இந்த கணக்கை கபடநாடகம் என்றும், அந்த பதிவுகளனைத்துக்கும் மோசமான ட்வீட்கள் என்றும் விமர்சிக்கப்பட்டன.

'இணையதள கட்டுப்பாடுகளுக்கு பின் செல்லுங்கள்'

இணையத்தில் எதை பதிவு செய்வது, எதை காண்பது என்று தொடங்கி தொடர்ந்து அது சார்ந்த விதிமுறைகளை சீனா அதிகப்படுத்தி வருகிறது.

எனவே இதனை சமாளிக்க சீனர்கள், VPN என்னும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சீனாவில் தடைசெய்யப்பட்ட பல இணையதளங்களை மற்றொரு நாட்டிலிருந்து பார்ப்பது போன்று இடத்தை மாற்றிவிடுகின்றனர்.

ஆனால், சீன அரசாங்கம் விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளால் டஜன் கணக்கான VPN செயலிகள் திரும்பபெறப்பட்டது. இது சமீபத்திய மாதங்களில் சமூக ஊடக மற்றும் குறுஞ்செய்தி செயலிகளின் பயன்பாடுகளில் செயலற்றி வந்தது.

"பயர்வாலுக்கு பின்னால் செல்லுங்கள்" மற்றும் "எங்களின் VPNஐ தாருங்கள்" போன்றவை @ccylchinaக்கு அனுப்பப்பட்ட சில பிரபலமான பதிலுரைகள்.

"தயவு செய்து பயர்வாலைப் பாதுகாக்க நீங்கள் எவ்வகையான அதிசயமான VPN பயன்படுத்தினீர்களா என்பதை சொல்லுங்கள்… உங்களுக்கு எவ்வளவு திமிரிருக்கும், அவ்வாறு செய்கிறவர்கள் கைது செய்யப்படலாம் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்!" என்று ஒரு டிவிட்டர் பயனாளி பதிவிட்டுள்ளார்.

சீனாவில் அதிகம் தணிக்கை செய்யப்படும் டிவிட்டர் போன்ற இணையதளமான வெய்போவை மற்ற விமர்சனங்கள் தாக்குகின்றன. "இது வெய்போ அல்ல [நீங்கள் அங்கு] கருத்துக்களை விட்டு துடைக்காதீர்கள், தொலைந்து போங்கள்" என்று ஒரு பயனாளர் பதிவிட்டுள்ளார்.

"போலி செய்தி"

இதே கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவு கடந்த வாரம் @ComYouthLeague என்ற பெயரில் மற்றொரு கணக்கொன்றை டிவிட்டரில் தொடங்கியது.

கிட்டத்தட்ட இதற்கு முன்னர் உருவாக்கப்பட்ட கணக்கைபோன்றே "ஹலோ டிவிட்டர்" என டிவிட் போட்டதுடன் நாட்டுப்பற்று மிக்க செய்திகளையும், லிங்குகளையும் அளித்திருந்தது.

இந்த கணக்குக்கும் பயர்வால் மற்றும் VPN குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டது. குறிப்பாக திங்கட்கிழமையன்று "தயவுசெய்து Central Communist Youth League என்ற பக்கத்தை மட்டும் காணவும்" என்று @ccylchina அதன் பின்தொடர்பாளர்களை கேட்டுக்கொண்டது.

பட மூலாதாரம், @CCYLCHINA

சீனாவின் இணையச் சட்டங்களை மதித்து @ComYouthLeague இருந்து ஒரு ட்வீட் மற்றும் ஒரு படத்தை வெளியிட்டது.

இதற்கு ComYouthLeague சிறிது வருத்தத்துடன், எங்களின் பதிவுகள்யாவும் "ஜோடிக்கப்பட்டதோ அல்லது போலியானதோ அல்ல" என்றும் "சீனாவின் இளைஞர்கள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டிய நேர்மறை எண்ணங்களை" பிரதிபலிக்கும் நோக்கத்துடனே செயல்படுவதாக கூறியுள்ளது.

இக்கணக்கானது இதுவரை பெரிய பின்தொடர்பாளர்களை பெறவில்லை. இந்த பதிவை எழுதும்போது @ComYouthLeague 1,666 பின்தொடர்பாளர்களை மட்டுமே கொண்டிருந்தது.

பல்வேறு நிறுவனங்கள் பொது மக்களிடையே கருத்துக்களை கொண்டு சேர்ப்பதற்கு வெய்போவையே சார்ந்திருக்கும் சீனாவில், டிவிட்டர் கணக்கொன்றிற்கு உள்ள இந்நிலை ஆச்சர்யமானது அல்ல.

பல சீன அரசு ஊடகங்கள் டிவிட்டரில் கணக்கொன்றை வைத்திருந்தாலும், சில அரசாங்கங்களும் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட கணக்குகளை பராமரிக்கின்றன.

சீனாவின் மாநிலக் கவுன்சிலின் தகவல் அலுவலகமும், முக்கிய சீன கம்யூனிஸ்ட் கட்சியும், ட்விட்டரில் இருந்தாலும் அவை கடைசியாக கடந்த மார்ச் 2016 ல் பதிவை இட்டுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :