100 பெண்கள்: உலகத்தை ஒரே வாரத்தில் பெண்களால் மாற்ற முடியுமா?

பெண்

பட மூலாதாரம், Getty Images

உலகெங்கிலும் உள்ள செல்வாக்கான மற்றும் உத்வேகம் அளிக்கக்கூடிய ''100 பெண்கள்'' தொடரை ஆண்டுதோறும் பிபிசி வெளியிடுகிறது.

உலகம் முழுதும் பெண்களை பாதிக்கும் பிரச்சனைகளை பற்றி விவாதிக்கப்படும் ''100 பெண்கள்'' இந்த ஆண்டு தொடரில், மாற்றம் ஏற்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பு பெண்களுக்கு வழங்கப்படும்.

துன்புறுத்தல், ஏற்றத்தாழ்வு மற்றும் சமுதாயத்தின் பல துறைகளில் பெண்களின் குறைவான பங்களிப்பு என முடிவில்லாதவை போல தோன்றும் பல்வேறு கதைகள், மனச்சோர்வையும் துயரத்தையும் கொடுப்பவை.

எனவே இந்த ஆண்டின் பெண்களுக்கான இந்த சிறப்புத் தொடரில் இந்த ஏற்றத்தாழ்வுகளை, சமத்துவமின்மையை சமாளிக்க புதுமையான மாற்றங்களை, யோசனைகளை பெண்களிடம் கேட்கிறோம்.

''100 பெண்கள்'' சிறப்புத் தொடரின் ஐந்தாவது ஆண்டான இந்த ஆண்டு, பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை நான்கு பிரிவுகளில் வகைப்படுத்தி இருக்கிறோம். அவை: கண்ணுக்கு தெரியாத தடைகள் (glass ceiling), பெண்களுக்கு கல்வியின்மை (female illiteracy), பொது இடங்களில் துன்புறுத்தல் (street harassment), விளையாட்டுத் துறையில் பாலியல் துஷ்பிரயோகம் (sexism in sport).

இதுபோன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் சிறப்பு நிபுணத்துவம் அல்லது அனுபவம் கொண்ட பெண்கள் ஒன்றாக இணைந்து செயல்படுவார்கள். அவர்கள் அக்டோபர் மாதத்தில் நான்கு வாரங்களுக்கு, நான்கு வெவ்வேறு நகரங்களில் இந்தத் திட்டத்தில் இணைந்து ஈடுபடுவார்கள்.

பட மூலாதாரம், Getty Images

பெண்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுவதற்கான காரணம் என்ன, அவை எப்படி ஏற்படுகின்றன என்பதை புரிந்து கொள்ள உலகம் முழுவதும் உள்ள பெண்கள் உதவுவார்கள். அவர்களின் உதவியால் இந்த சவாலில் 100 பெண்கள் வெற்றிபெறுவார்கள்.

ஏனெனில், அவர்கள் எதிர்கொண்ட சிறப்பான அனுபவங்களை, யோசனைகளை பகிர்ந்துக் கொள்வார்கள் அல்லது அவர்கள் எதாவது ஒருவிதத்தில் இதில் பங்களிப்பார்கள்.

இவை வெறும் யோசனைகள், பரிந்துரைகள் மட்டுமல்ல. வானொலி, ஆன்லைன், சமூக ஊடகங்களில் 100 பெண்கள் உரையாடுவார்கள்.

'கண்ணுக்கு தெரியாத தடைகள்' சவால், சான் பிரான்சிஸ்கோவிலும், 'பெண்களுக்கு கல்வியின்மை' என்ற சவால், டெல்லியிலும், நைரோபியை சேர்ந்த ஒரு குழுவின் உதவியுடன் லண்டனில் 'பொது இடங்களில் துன்புறுத்தல்' என்ற சவாலும், 'விளையாட்டுத் துறையில் பாலியல் துஷ்பிரயோகம்' என்ற சவால், ரியோவிலும் மேற்கொள்ளப்படும்.

நான்கு நகரங்களில் இந்த சவால்கள் மேற்கொள்ளப்பட்டாலும் இது தொடர்பான உரையாடல்கள் உலகளாவியதாக இருக்க வேண்டும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள பெண்களிடம் இருந்து கருத்துகளை கேட்டறிய வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images

உலகை மாற்ற வித்தியாசமான முயற்சிகளை செய்திருக்கும் பெண்களின் பெயர் இல்லாமல் 100 பெண்கள் பட்டியல் முழுமையடையாது.

இந்த ஆண்டு இந்தத் தொடரை வெளியிடும் பருவத்தை புதுப்பித்துள்ளோம், அதேபோல 100 பெண்கள் கொண்ட பட்டியலையும் புதுப்பிக்கவேண்டும் என்று நினைத்தோம்.

எனவே, இந்த மாத பிற்பகுதியில் பட்டியல் அறிவிக்கப்படும்போது, அதில் 60 பெண்களின் பெயர் மட்டுமே இடம்பெறும். மீதமுள்ள 40 இடங்கள் காலியாகவே இருக்கும். சந்தர்ப்பங்களில் சவாலை எதிர்கொண்ட பெண்களின் பெயர்கள் இந்த தொடரின்போது பட்டியலில் சேர்க்கப்படும்.

பட மூலாதாரம், Getty Images

"2015 ஆம் ஆண்டில், 30 நாடுகளில், 10 மொழிகளில், 150 விவாதங்கள் நடத்தப்பட்டன. 2016 இல், தகுதியுடைய ஆனால் வெளியில் அறியப்படாத 450 பெண்கள் கண்டறியப்பட்டு விக்கிபீடியாவில் இடம்பெற்றனர். தற்போது 2017 ஆம் ஆண்டில் பெண்களில் பங்களிப்பை ஒரு முழுமையான புதிய நிலைக்கு எடுத்துச் செல்கிறோம்" என்கிறார் 100 பெண்கள் தொடரின் ஆசிரியர் ஃபியோனா கிராக்.

"அற்புதமான விஷயங்கள் நடக்கவிருக்கிறது. ஆனால், திறமையான 100 பெண்கள் வெளிவருவார்களா? அதுவும் ஒரு மாதத்திற்குள் இது நடைபெறுமா என்று கவலையாக இருக்கிறது."

பட மூலாதாரம், Getty Images

இதைத் தொடங்குவதற்கு எங்களுக்கு சில உத்வேகம் கிடைத்திருக்கிறது, பெண் கண்டுபிடிப்பாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்பது கண்டுபிடிப்புகள் கொண்ட கட்டுரையுடன் இந்தத் தொடரை தொடங்குகிறோம்.

பேஸ்புக், இன்ஸ்ட்ராகாம் மற்றும் டிவிட்டரில் எங்களை தொடரலாம். # 100 Women என்ற டேகை பயன்படுத்துங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :