கரீபியன் தீவுகளை கடுமையாக தாக்கியுள்ள மரியா சூறாவளி

கரீபியன் தீவுகளை தாக்கியுள்ள மரியா சூறாவளி பேரழிவை உண்டாக்க சாத்தியமுள்ள ஐந்தாம் எண் வகை புயலாக வலுப்பெற்றுள்ளது என்று அமெரிக்க வானிலை முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மரியா சூறாவளி

பட மூலாதாரம், NASA

மரியா சூறாவளியின் வழித்தடத்தில் முதலாவதாக அமைந்துள்ள டொமினிகா தீவில் மணிக்கு 260 கிலோமீட்டர் பலத்த சூறாவளி காற்று வீசுகிறது.

'பிரதமர் வீ டும் தப்பவில்லை'

டொமினிகா தீவுகளின் பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெரிட் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவொன்றில், தனது வீட்டின் மேற்கூரை சூறாவளியால் தூக்கி எறியப்பட்டதாகவும் , சூறாவளியின் தாக்கத்தால் தானும் கருணையை எதிர்பார்த்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Facebook

படக்குறிப்பு,

டொமினிகா தீவுகளின் பிரதமர் ரூஸ்வெல்ட் வெளியிட்ட பதிவு

தனது வீடு வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர் ரூஸ்வெல்ட், வெள்ளத்தில் இருந்து தான் மீட்கப்பட்டு விட்டதாக பின்னர் தெரிவித்தார்.

டொமினிகா தீவுகளில் உள்ள அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் ஆகியவை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளன.

இந்த மாத ஆரம்பத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இர்மா சூறாவளியை போலவே மரியா சூறாவளி கடுமையான வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது.

கடுமையான பாதிப்படைந்துள்ள பிரெஞ்சு பிராந்தியமான செயிண்ட் மார்டின் தீவில் மக்கள் வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், Reuters

முன்னதாக, கடந்த இரன்டு வாரங்களுக்கு முன்பு கரீபியன் தீவுகளை கடுமையாக தாக்கி பாதிப்பு உண்டாக்கிய இர்மா சூறாவளியால் குறைந்தது 29 பேர் இறந்துள்ளனர்.

அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான இர்மா சூறாவளி முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் மிகவும் கடுமையான வேகத்தில் கரீபியன் தீவுகளை வடமேற்காக தாக்கியது.

கரீபியன் தீவுகளில் ஒன்றான பார்புடாவில் உள்ள 95 சதவீத கட்டடங்களும் இந்தச் சூறாவளியால் சேதமடைந்துவிட்டன. அந்தத் தீவில் குடியிருப்பதே சாத்தியமில்லாமல் போய்விட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :