ரோஹிஞ்சா பிரச்சனை : 'சர்வதேச கண்காணிப்பு குறித்து அச்சமில்லை' - ஆங் சான் சூச்சி

மியான்மரில் ரோஹிஞ்சா பிரச்சனையை அந்நாட்டு அரசு சமாளித்த விதம் குறித்து அதிகரித்துள்ள சர்வதேச கண்காணிப்பு குறித்து தனக்கு அச்சமில்லை என்று மியான்மரின் நடைமுறை தலைவர் ஆங் சான் சூச்சி நாட்டு மக்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார்.

'சர்வதேச கண்காணிப்பு குறித்து அச்சமில்லை'

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

'சர்வதேச கண்காணிப்பு குறித்து அச்சமில்லை'

கடந்த மாதத்தில், மியான்மரில் உள்ள வடக்கு ரகைன் மாகாணத்தில் ஏற்பட்ட வன்முறையால் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிஞ்சா முஸ்லீம் மக்கள் வங்கதேசத்துக்கு தப்பி சென்றனர்.

இதற்கு பிறகு நாட்டு மக்களுக்கு முதல்முறையாக ஆங் சான் சூச்சி தற்போதுதான் உரையாற்றியுள்ளார்.

ரகைன் மாகாணத்தில் வன்முறை நிறுத்தப்பட்ட பிறகு, பெரும்பான்மையான முஸ்லீம்கள் மியான்மரை விட்டு செல்லவில்லை என்று தனது உரையில் சூச்சி கூறினார்.

பட மூலாதாரம், AFP

ரோஹிஞ்சா பிரச்சனை குறித்து ஆங் சான் சூச்சி கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்தது சர்வதேச அளவில் பெரும் விமர்சனத்திற்குள்ளானது.

இந்த வார இறுதியில் நடக்கவுள்ள ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் கலந்து கொள்ள தன்னால் பயணிக்க முடியாததால், தற்போது நாட்டு மக்களுக்காக இவ்வுரையை நிகழ்த்துவதாக தனது பேச்சில் சூச்சி குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

4 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிஞ்சாக்கள் வங்கதேசத்துக்கு தப்பிச் சென்றுள்ளனர்.

மியான்மரில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை சமாளிக்க தனது அரசு எடுத்துள்ள நடவடிக்கைள் குறித்து சர்வதேச சமூகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சூச்சி விருப்பம் தெரிவித்தார்.

ரகைன் மாகாணத்தில் நடந்த மனித உரிமை மீறல்களை கண்டித்துள்ள ஆங் சான் சூச்சி, அங்கு நடந்த அத்துமீறல்களுக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

'மியான்மரில் நடப்பது இன அழிப்புக்கான எடுத்துக்காட்டு'

முன்னதாக, பாதுகாப்பு நடவடிக்கை மூலம் மியான்மரில் உள்ள ரோஹிஞ்சா முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்படுவது, "இன அழிப்புக்கான மிகச்சிறந்த எடுத்துக்காட்டு போல இருக்கிறது" என ஐ.நாவின் மனித உரிமை ஆணையர் தெரிவித்திருந்தார்.

ரகைன் மாகாணத்தில் "மோசமான ராணுவ நடவடிக்கையை" முடிவுக்கு கொண்டு வர மியான்மர் அரசிடம் ஐ.நாவின் மனித உரிமை ஆணையர் சையத் ராவுத் அல் ஹுசைன் வலியுறுத்தியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

பெளத்த மதம் பெரும்பான்மையாக உள்ள ரகைன் மாகாணத்தில் வாழ்ந்து வரும் ரோஹிஞ்சா இனமக்கள் (பெரும்பாலும் முஸ்லீம்கள்) நீண்ட காலமாக நாட்டில் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :