பிபிசி தமிழில் இன்று... 6 மணி வரை

பிபிசி தமிழில் இன்று (செவ்வாய்க்கிழமை) 6 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

திருமுருகன் காந்தி

பட மூலாதாரம், TIRUMURUGAN

சென்னை உயர் நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள உத்தரவில் திருமுருகன் காந்தி, இளமாறன், அருண் மற்றும் டைசன் மீது பதியப்பட்ட குணடர் தடுப்பு சட்ட வழக்கை ரத்து செய்துள்ளது.

இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலம் நிமுச்சில், ஜெயின் சமூகத்தை சேர்ந்த இளவயது தம்பதியினர் தங்கள் மூன்று வயது குழந்தையை துறந்துவிட்டு சந்நியாசம் வாங்கப் போகிறார்கள். குழந்தையையும், குடும்பத்தையும் மட்டும் அவர்கள் துறக்கவில்லை, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும் விட்டுச்செல்கின்றனர்.

இலங்கையில் அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள அரசியல் சாசன 20ஆவது திருத்த மசோதா அரசியலமைப்புக்கு முரணானது என உச்ச நீதிமன்றம் நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

பட மூலாதாரம், Reuters

மியான்மரில் ரோஹிஞ்சா பிரச்சனையை அந்நாட்டு அரசு சமாளித்த விதம் குறித்து அதிகரித்துள்ள சர்வதேச கண்காணிப்பு குறித்து தனக்கு அச்சமில்லை என்று மியான்மரின் நடைமுறை தலைவர் ஆங் சான் சூச்சி நாட்டு மக்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், TWITTER / @CCYLCHINA

சீனாவில் இணைய பயன்பாடு குறித்து கடுமையான குறித்த சட்ட திட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில் அனைத்தையையும் மீறி தொடங்கப்பட்டுள்ள இந்த கணக்கை கபடநாடகம் என்றும், அந்த பதிவுகளனைத்துக்கும் மோசமான ட்வீட்கள் என்றும் விமர்சிக்கப்பட்டன.

பட மூலாதாரம், FATIMA HUSSAINI

கலாசார பன்முகத்தன்மையை கொண்ட நாடு ஆப்கானிஸ்தான் அதன் ஒவ்வொரு மாகாணத்திற்கும், ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தன்மை, தனிப்பட்ட காலநிலை உண்டு. ஆஃப்கானிஸ்தானின் சில பகுதிகள் சமவெளியாகவும், சில பகுதிகள் விண்ணைத் தொடும் உயரம் கொண்ட மலைகளை கொண்டதாகவும் இருக்கிறது.

அ.தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கமும் செய்யப்பட்டதை எதிர்த்து, அவர்கள் தரப்பிலான கூடுதல் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று செவ்வாக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

துன்புறுத்தல், ஏற்றத்தாழ்வு மற்றும் சமுதாயத்தின் பல துறைகளில் பெண்களின் குறைவான பங்களிப்பு என முடிவில்லாதவை போல தோன்றும் பல்வேறு கதைகள், மனச்சோர்வையும் துயரத்தையும் கொடுப்பவை.

.சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :