ரொஹிஞ்சாக்கள் ஏன் ஓடினார்கள் என்று தெரியவில்லையாம்

ரொஹிஞ்சாக்கள் ஏன் ஓடினார்கள் என்று தெரியவில்லையாம்

மியான்மரில் இருந்து நான்கு லட்சம் ரொஹிஞ்சா முஸ்லிம்கள் ஏன் ஓடினார்கள் என்று தனக்கு தெரியவில்லை என்று அந்த நாட்டின் தலைவியான ஆங் சான் சூச்சி பேசியுள்ளார்.

இராணுவ நடவடிக்கைகளை அடுத்து ரொஹிஞ்சாக்கள் வெளியேறியதாக ஆதாரங்கள் இருக்கின்ற போதிலும் அவர் இவ்வாறு பேசியுள்ளார்.

ரொஹிஞ்சா ஆயுதக்குழுவின் தாக்குதலை அடுத்து ஆரம்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு அவர் மீது சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ளது.

அதேவேளை இன்னமும் மக்கள் எல்லையை கடந்து வங்கதேசத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :