வீட்டுக்குள் விவசாயம்! (காணொளி)
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வீட்டுக்குள் விவசாயம் செய்யும் பொறியியல் பட்டதாரி

ஒருவர் உண்ணும் உணவை அவரே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும் என கூறி பிரசாரம் செய்கிறார் சென்னையை சேர்ந்த அர்ச்சனா ஸ்டாலின்.

மாடித்தோட்டம் அமைத்துக் கொடுப்பதையே தற்போது தொழிலாகவும் கொண்டுள்ளார் அர்ச்சனா.

நகரத்து பெண்களின் மன வலிமையை மேம்படுத்தவும் இந்த தோட்டக்கலை பயிற்சி உதவுவதாக அர்ச்சனா கூறுகிறார்.

ஐ.டி. துறையில் பணியாற்றிய அர்ச்சனா, பின்னர் சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல், நீர் நிலைகளை மீட்டெடுத்தல் போன்ற பணிகளிலும் ஈடுபட்டுள்ளார்.

அர்ச்சனாவின் கணவர் ஸ்டாலின் அவரது கல்லூரித்தோழன், பொறியியல் பட்டதாரியான அவரும் ஒரு முழுநேர விவசாயி.

மாநகரங்களில் மரக்கன்றுகளை நடுவதற்கு இடம் பிடிப்பது மற்றும் அவற்றை பராமரிப்பது கடினம் என்பதால், விதை, தொட்டி, இயற்கை உரம் உள்ளிட்ட மாடித்தோட்டம் அமைக்க தேவையான பொருட்களையும் பெட்டியிலடைத்து, அவற்றை பரிசு பொருளாக அளிக்கலாம் என்பது அர்ச்சனாவின் கருத்து. அப்படி ஒரு 'ஃகிப்ட் பாக்ஸ்'-ஐயும் அவர் உருவாக்குகிறார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்