பிபிசி தமிழில் இன்று... 2 மணி வரை

பிபிசி தமிழில் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை AFP

மத்திய மெக்சிகோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.நாட்டின் தலைநகரான மெக்சிகோ சிட்டியில் உள்ள பல கட்டடங்கள் இந்த நிலநடுக்கத்தால் இடிந்துள்ளன.

செய்தியை படிக்க:மெக்சிகோவை உலுக்கிய நிலநடுக்கம்: 200-க்கும் மேற்பட்டோர் பலி

படத்தின் காப்புரிமை AFP

செக்ஸ் பொம்மைகளை வாடகைக்கு அளிக்கும் ஒரு சீன நிறுவனம், ஆரம்பித்த சில தினங்களில் சேவையை நிறுத்தியுள்ளது.கடந்த வியாழக்கிழமை முதல், டச் நிறுவனம் தின வாடகை மற்றும் நீண்ட நாட்களுக்கான வாடகையில், 5 வகையான செக்ஸ் பொம்மைகளை வழங்க துவங்கியது; ஆனால் அது நிறைய புகார்களையும் விமர்சனங்களையும் ஈர்த்தது.

செய்தியை படிக்க:செக்ஸ் பொம்மை வாடகை சேவையை சீன நிறுவனம் நிறுத்தியது ஏன்?

படத்தின் காப்புரிமை Getty Images

இணையத்தில் தீவிரவாதக் கருத்துகள் பரப்பப்படுவற்கு எதிராக தொழில்நுட்ப நிறுவனங்கள் எடுத்துவரும் முயற்சிகளை கூகுள் ஆதரித்துள்ளது.ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபை கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக பிபிசியிடம் பேசிய கூகுளின் மூத்த துணைத் தலைவர் கென்ட் வால்க்கர், டிவிட்டர் மட்டும் இதற்காக ஒரு மில்லியன் கணக்குகளை நீக்கியுள்ளது எனக் கூறியுள்ளார்.

செய்தியை படிக்க:இணையத்தில் தீவிரவாத கருத்துகளுக்கு எதிரான முயற்சிகளை கூகுள் ஆதரிக்கும்

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவிலுள்ள பதின்பருவத்தினர் மற்றும் இளைஞர்கள் பலர் சமீப காலமாக தற்கொலை செய்து கொள்வதற்கு காரணமாக கூறப்படும், வதந்தியாக வரும் இணைய சவாலான, நீலத் திமிங்கிலம் எனச் சொல்லப்படும் 'ப்ளூ வேல்' விளையாட்டானது நாடு முழுவதும் பீதியை கிளப்பியிருக்கிறது.

செய்தியை படிக்க:'ப்ளூ வேல்' விளையாட்டு தற்கொலைக்கு தூண்டுவது ஏன்?

படத்தின் காப்புரிமை QUAIS HUSSAIN

இந்தியா-பாகிஸ்தான் இடையே 1965-இல் நடைபெற்ற போர் தொடர்பான 22 கட்டுரைகள் கொண்ட தொடரின் 11-ஆவது பாகம் இது. இந்தியா-பாகிஸ்தான் போர், பல ஆண்டுகளுக்கு பிறகு வருத்தம் தெரிவித்த பாகிஸ்தானி விமானி.

செய்தியை படிக்க:இந்தியா-பாகிஸ்தான் போர்: பல ஆண்டுகளுக்கு பிறகு வருத்தம் தெரிவித்த பாகிஸ்தானி விமானி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :