பிபிசி தமிழில் இன்று... 6 மணி வரை

பிபிசி தமிழில் இன்று (வியாழக்கிழமை) 6 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

காவிரி டெல்டா பகுதிகளில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடாமல், காவிரி மகாபுஷ்கரம் (காவிரி ஆற்றை வழிபடும் விழா) நிகழ்வுக்காக திறந்துவிடப்பட்டதாகக் கூறி தமிழக விவசாயிகள் அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை வாசிக்க: பாசனத்திற்கு இல்லாமல் புஷ்கரம் பூஜைக்கு திறக்கப்பட்டதா காவிரி?

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நடிகர் கமல்ஹாசனை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். கமல் அரசியலுக்கு வரவேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் அப்போது அழைப்பு விடுத்தார்.

இந்த செய்தியை வாசிக்க: கெஜ்ரிவாலிடம் கமல்ஹாசன் அரசியல் ஆலோசனை

படத்தின் காப்புரிமை AFP

குஜராத்தில், இந்து சமூக மக்களின் பண்டிகையான நவராத்திரியை முன்னிட்டு பிரபல ஆணுறை தயாரிப்பு நிறுவனமான மேன்ஃபோர்ஸ் நிறுவனம், தங்களின் ஆணுறை தயாரிப்பின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் வெளியிட்ட விளம்பரம் நாட்டில் சிலரை கோபப்படுத்தியுள்ளது.

இந்த செய்தியை வாசிக்க: நவராத்திரியின் போது சன்னி லியோனின் 'ஆணுறை' விளம்பரம் : குஜராத்தில் கொதிப்பு?

படத்தின் காப்புரிமை MOD

பாகிஸ்தான் விமானப்படை, இந்திய தரப்பின் கனரக ஆயுதங்களுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இருந்தபோதிலும் 11 மணிக்குள் கால்வாயின் மேற்குப் பகுதியில் பாடாநகரையும் பிறகு டோக்ரையையும் இந்திய வீர்ர்கள் கைப்பற்றினார்கள்.

இந்த செய்தியை வாசிக்க: பெரும் உயிர்த் தியாகத்துடன் டோக்ரை யுத்தத்தை வென்றது இந்தியா

படத்தின் காப்புரிமை Getty Images

ஆம்ஸ்டர்டாம் நகரின் மையத்திலுள்ள ஒரு பாதையில் சிறுநீர் கழித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டதற்கு நெதர்லாந்து பெண்ணொருவருக்கு 90 யூரோ அபராதம் விதித்த வழக்கு பெண்களுக்கு போதிய கழிப்பிடம் இல்லாதது பற்றிய அனல் பறக்கும் விவாதத்தை அங்கு ஏற்படுத்தியுள்ளது.

இந்த செய்தியை வாசிக்க: தெருவில் பெண் சிறுநீர் கழித்த பிரச்சனை, உரிமைப் போராட்டமாக வெடித்த சுவாரஸ்யம்!

அதிக நிதி ஒதுக்கி மலிவான தரம் கொண்ட புடவைகளை வழங்கியுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் இதனை "புடவை ஊழல்" என்று கூறி இதற்கு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த செய்தியை வாசிக்க: இலவச சேலைகளை தீயிட்டுக் கொளுத்தி கொந்தளிக்கும் தெலங்கானா பெண்கள்

படத்தின் காப்புரிமை AFP

'வாட்ஸ் ஆப்' மற்றும் ஸ்கைப் போன்ற குரல் மற்றும் வீடியோ அழைப்பு செயலிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை செளதி அரேபியா நீக்குகிறது. உற்பத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசிக்க: இணைய அழைப்புகள் மீதான தடையை நீக்குகிறது செளதி அரேபியா

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :