பிபிசி தமிழில் இன்று... 10 மணி வரை

பிபிசி தமிழில் இன்று (வியாழக்கிழமை) 10 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை TWITTER

அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் புதிய படம் மெர்சல். அட்லீயின் பிறந்தநாளான இன்று மாலை இத்திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியானது.

செய்தியை வாசிக்க:'மெர்சல்': இந்தியா முழுவதும் வைரலாகும் முன்னோட்டக் காட்சி

படத்தின் காப்புரிமை Getty Images

பள்ளியில் பணிபுரியும் இரண்டு ஊழியர்களால், மூன்று மாதங்களுக்கு மேலாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பதின்ம வயதுப் பெண், கட்டாய கருக்கலைப்பு செய்யப்பட்டதால், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.

செய்தியை வாசிக்க:பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இந்திய பெண், கருக்கலைப்புக்குப் பிறகு ஆபத்தான நிலையில்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
மணிலா

பிலிப்பைன்ஸில் போதை பொருள் வர்த்தகத்துடன் தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டப்படுவோர் அரசாங்கத்தால் கொலை செய்யப்படுவதாக கூறப்படும் நிலையில், இரவு நேரத்தில் நடக்கும் கொடூர கொலைகளை புகைப்பட பத்திரிக்கையாளர் ஒருவர் ஆவணப்படுத்தியுள்ளார். அது தொடர்பான காணொளி.

படத்தின் காப்புரிமை CHRISTIAN JAKUBASZEK/GETTY IMAGES

உங்களுக்கு மிகவும் வசதியான, உங்கள் வீட்டில் இருந்து, வெளியே வந்து பொதுவெளியில் திடீரென கூடி, குழுவாக நடனமாடும் நிகழ்வில் பங்கேற்க எது தூண்டுதலாக இருக்கும் ? பதிலளிப்பதற்கு முன்பு சிந்தியுங்கள்.

செய்தியை வாசிக்க:பெண்களை சிறுமைப்படுத்திப் பாடும் திடீர் கூட்டத்தில் நீங்கள் பங்கேற்பீ்ர்களா?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காத பாஸ்கிங் சுறாக்கள்

உலகின் இரண்டாவது மிகப்பெரிய சுறாவான பாஸ்கிங் சுறா மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காதவை. ஒரு மீட்டர் அளவுள்ள அகலமான வாயை கொண்டுள்ள இவை சிறு மிதவை உயிரிகளை உட்கொண்டு உயிர்வாழ்கின்றன. ஏழு டன் எடையுள்ள இந்த சுறாவை பற்றி விளக்குகிறது இந்த காணொளி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :