மறைந்த அரசருடன் பிரபல 'ஸ்டார் வார்ஸ்' கதாபாத்திரம்; செளதி கல்வித்துறையில் குளறுபடி

படத்தின் காப்புரிமை SHAWEESH/GHAREM STUDIO

செளதி அரேபியாவின் மறைந்த அரசர் ஃபைசலின் புகைப்படம் ஒன்று, 'ஸ்டார் வார்ஸ்' படத்தில் வரும் பிரபல கதாபாத்திரமான யோடாவுடன் வெளியான பாடப் புத்தகங்களை தயாரித்ததற்காக செளதி அரேபியாவின் கல்வித்துறை அமைச்சர் மன்னிப்பு கோரியுள்ளார்.

எதிர்பாராத விதமாக நிகழ்ந்த தவறை குழு ஒன்று விசாரித்து வருவதாக அகமது அல்-இஸ்ஸா தெரிவித்துள்ளார்.

அந்தப் புகைப்படத்தில், 1945 ஆம் ஆண்டு ஐ.நா சபையில் அரசர் ஃபைசல் கையெழுத்திடும் போது, குள்ளமாக தோற்றமளிக்கும் ஜெடாய் மாஸ்டர் யோடா அரசருடன் அமர்ந்திருப்பது போன்ற ஒரு படைப்பை செளதி கலைஞர் ஷவீஷ் உருவாக்கியிருந்தார்.

பாடப்புத்தகத்தில் இந்தப்படம் எவ்வாறு வந்தது என்பது குறித்து தனக்குத் தெரியவில்லை என்று ஷவீஷ் பிபிசியிடம் கூறியுள்ளார்.

எனினும், அரசரை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் படைப்பை உருவாக்கவில்லை என்பதை ஷவீஷ் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

''இளைய தலைமுறையினர் உள்பட எல்லோரும் இங்கு அரசர் ஃபைசலை விரும்புகிறார்கள்,'' என்று கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை SAUDI MINISTRY OF EDUCATION
Image caption சமூக ஆய்வுகள் புத்தகம் ஒன்றில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய புகைப்படம்

மறைந்த எகிப்திய அதிபர் அன்வர் சதாத் ஒருமுறை டிஸ்னிலேண்ட் பொழுதுபோக்கு பூங்காவை பார்வையிட்ட போது அங்கிருந்த மிக்கி மவுஸ் பொம்மைக்கு பின்னால் நின்று கொண்டிருந்தபடி புகைப்படம் ஒன்று எடுக்கப்பட்டது. அதுதான் இதுபோன்ற படைப்புகளை உருவாக்க காரணமாக இருந்தது என்கிறார் ஷவீஷ்.

அரசர் ஃபைசலும், ஜெடாய் மாஸ்டர் யோடாவும் இருவரும் மிகச்சிறந்தவர்கள், வலிமையானவர்கள் மற்றும் அமைதியை விரும்புபவர்கள் என்பதால் புகைப்படத்தில் அரசுருடன் யோடாவை சேர்த்ததாக ஷவீஷ் தெரிவித்துள்ளார்.

''புத்தகத்தை அச்சடிப்பதற்குமுன் யாராவது ஒருவர் இதை சரிபார்த்திருக்க வேண்டும்,'' என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்