தினமும் தன்னை தானே காயப்படுத்திக் கொண்ட ஒலிம்பிக் வீராங்கனை

ஒலிம்பிக்

காயங்களால் தனது விளையாட்டு வாழ்க்கை முடிந்துவிடும் என்று அஞ்சிய ஒலிம்பிக் சாம்பியன் டாம் கில்லி ஹோம்ஸ் அதிலிருந்து மீள எப்படி தனக்குத் தானே காயங்களை ஏற்படுத்திக் கொண்டார் என்பது குறித்து பேசியுள்ளார்.

கெண்டில் வசிக்கும் டாம் கில்லி, 2004 -ம் ஆண்டு ஏதென்ஸில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 800 மீட்டர் மற்றும் 1,500 மீட்டர் ஆகிய பிரிவுகளில் தங்கம் வென்றவர்.

தான் எதிர்கொண்ட வேதனைகளிலிருந்து மீள, தன்னை தானே காயப்படுத்திக் கொண்டதாக சென்ற ஆண்டு தெரிவித்திருந்தார்.

மன அழுத்தத்தால் தான் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டு இருந்தேன் என்ற தனது அனுபவத்த கடந்த சனிக்கிழமையன்று டன்பிரிட்ஜ் வெல்ஸில் நடந்த நியூ ஹெல்த் மற்றும் வெல்பீயிங் லைவில் பகிர்ந்துக் கொண்டிருக்கிறார்.

டாம் கெல்லி சொல்கிறார், "நான் மன அழுத்தத்தில் இருந்தபோது கத்திரிகோலைக் கொண்டு என்னை நானே காயப்படுத்திக் கொள்ள தொடங்கினேன்."

1997 உலக சாம்பியன்ஷிப்பில் காயம்பட்ட உடனே ஏடுக்கப்பட்ட புகைப்படத்தை டாம் கெல்லி இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்தார்.

அவருக்கு ஏற்பட்ட ஏழு காயங்களில் இதுவும் ஒன்று. இந்த காயங்களால்தான் அவருக்கு கடும் மன உளைச்சல் உண்டானது. இதனால் அவர் தன்னைதானே காயப்படுத்திக் கொள்ள தொடங்கினார்.

"வெளிச்சம் இருக்கும்"

பிபிசி சவுத் ஈஸ்ட்டிடம் பேசிய அவர், வாழ்க்கையில் பல ஏற்றத் தாழ்வுகளை சந்தித்தப்பின், நிலைக்கண்ணாடியை பார்த்த போது, நான் இந்த நிலையில் இருக்க விரும்பவில்லை என்பதை உணர்ந்தேன். எனது குளியலறையில் உள்ள கத்திரிகோல்களைக் கொண்டு என்னை நானே காயப்படுத்திக் கொள்ள தொடங்கினேன். உண்மையில் அது ஒரு மிகமோசமான இடம்"

படத்தின் காப்புரிமை Getty Images

"என்னுடைய செய்தி என்னவென்றால், உங்களால் இதிலிருந்து மீள முடியும். உங்களால் மீண்டும் வெற்றியாளராக முடியும். ஒவ்வொரு குகையின் முடிவிலும் நிச்சயம் வெளிச்சம் இருக்கும்."

நியூ ஹெல்த் மற்றும் வெல்பீயிங் லைவின் இணை நிறுவனர் பெக்கு ராண்டேல், "கெல்லி சிரமப்பட்டார். ஆனால், அதிலிருந்து மீண்டார். தொடர்ந்து இயங்கினார். மக்கள் அனைவரும் அவர்கள் தனியாக இல்லை என்பதை உணர வேண்டும். அவர்கள் மக்களுடன் உரையாட வேண்டும். குறிப்பாக தங்கள் பிரச்னைகள் குறித்து. நிச்சயம் அது இவர்களை தங்களது பிரச்னைகளிலிருந்து மீள உதவும்." என்றார்.

சுய காயம்

மக்கள் தங்களது கடினமான காலங்களில், மோசமாக உணரும் போது, கடினமான நினைவுகளின் போது, தங்களை தாங்களே உடல்ரீதியாக காயப்படுத்திக் கொள்கிறார்கள் என்று மென்டல் ஹெல்த் சேரிட்டி மைண்ட்ஸ் அமைப்பு கூறுகிறது.

மேலும் அந்த அமைப்பு, தங்களை தாங்களே காயப்படுத்திக் கொள்ளும் இந்த மக்கள் நிச்சயம் உளவியல் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அதுபோல காயங்களுக்கும் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்