ரகைனில் கல்லறைக்குள் இந்து சமூகத்தினரின் பெரிய அளவிலான பிணக்குவியல்- மியான்மர் அரசு

மியான்மர் அரசு படத்தின் காப்புரிமை Getty Images

மியான்மரின் ரகைன் மாகாணத்தில் ஒரே இடத்தில் குவியலாக புதைக்கப்பட்ட இந்து மக்களின் சடலங்கள் கொண்ட கல்லறை கண்டறியப்பட்டுள்ளதாக மியான்மர் அரசு கூறுகிறது.

இந்தக் கல்லறையில் இருந்த 28 சடலங்களில் பெண்களின் சடலங்கள் அதிகமாக இருந்தன.

இந்த சடலங்கள் அனைத்தும் இந்து சமூகத்தினருடையது. இவர்களை ரோஹிஞ்சா தீவிரவாதிகள் கொன்று புதைத்திருக்கலாம் என்று மியான்மர் அரசு கூறுகிறது.

மியான்மரில், ரகைன் பிராந்தியத்திற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அரசு கூறும் தகவல்களை தனிப்பட்ட முறையில் சரிபார்ப்பதற்கான சாத்தியங்கள் இல்லை.

படத்தின் காப்புரிமை AFP

மியான்மரில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் காவல் சாவடிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து மியான்மர் ராணுவம் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

ராணுவத்தின் இந்த நடவடிக்கைகளை 'இன ஒழிப்பு' நடவடிக்கை என ஐ.நா கூறுகிறது.

மியான்மரில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால் நான்கு லட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமான ரோஹிஞ்சா முஸ்லிம்கள் அண்டை நாடான வங்கதேசத்தில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்