பிபிசி தமிழில் இன்று பகல் 1 மணிவரை வெளியான முக்கிய செய்திகள்

பிபிசி தமிழில் இன்று (செய்வாய்க்கிழமை) வெளியான முக்கியச் செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை PAKISTAN NATIONAL ARCHIVE
Image caption ருட்டியை ஜாமியா மசூதிக்கு அழைத்துச் சென்ற ஜின்னா, அவரை இஸ்லாமியராக மதம் மாறச் செய்தார். 1918 ஏப்ரல் 19ஆம் தேதி காதலர்கள் திருமண பந்தத்தில் இணைந்தார்கள்.

1918 ஏப்ரல் 20ஆம் தேதியன்று வெளியான அந்த செய்தித்தாளில், முகம்மது அலி ஜின்னா, தின்ஷாவின் மகள் லேடி ருட்டியை திருமணம் செய்து கொண்ட செய்தி வெளியாகியிருந்தது.

16 வயது பெண்ணிடம் மனதை பறிகொடுத்த ஜின்னா

படத்தின் காப்புரிமை Getty Images

தனது நாட்டின் மீது போர்க் பிரகடனம் செய்திருப்பதாக அமெரிக்கவை குற்றஞ்சாட்டும் வட கொரியாவின் ஓர் அறிக்கையை அமெரிக்கா அபத்தமான யோசனை என்று கூறி புறக்கணித்துள்ளது.

வட கொரியா மீது போரா? : அமெரிக்கா மறுப்பு

படத்தின் காப்புரிமை WWW.BHARATRAKSHAK.COM

இந்தியா - பாகிஸ்தான் இடையே 1965-இல் 22 நாட்கள் நடைபெற்ற போர் தொடர்பான 22 கட்டுரைகள் கொண்ட தொடரின் 15-வது பகுதி இது.

இந்தியா - பாகிஸ்தான்: 22 நாள் போரில் வென்றது யார்?

இலங்கையில் சப்ரகமுவ, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாண சபைகளின் பதவிக்காலம் இந்த வாரத்தில் முடிவடைகிறது. சப்ரகமுவ மாகாண சபையின் ஆயுள் இன்று (செவ்வாய்கிழமை) நள்ளிரவுடன் முடிகிறது.

இலங்கை : இந்த வாரத்துடன் கலையவுள்ள 3 மாகாண சபைகள்

படத்தின் காப்புரிமை Getty Images

ஜப்பான் மற்றும் ஒக்கோட்ஸ்க் கடல் நீரில் ரஷ்யாவுடன் சீனா நடத்திக்கொண்டிருக்கும் கூட்டு கடற்படை பயிற்சிகளானது, ஆசியாவின் மிகப்பெரிய நாடு எப்படி தனது கடற்படையின் திறன்களை வேகமாக விரிவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கான சமீபத்திய உதாரணம்.

உலக அளவில் கடற்படையை விரிவாக்க முயற்சி செய்யும் சீனா

படத்தின் காப்புரிமை JAY VIRDEE
Image caption ஜெய் விர்தி

'கைகளில் வலிக்கும்போது, விரைவில் என் உடம்பு கல்லைப்போல மாறிவிடும் என்பதை எனக்கு நினைவூட்டுகிறது.' இதைச் சொல்வது 37 வயது ஜெய் விர்தி. சில ஆண்டுகளுக்கு முன்புவரை பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த அவருக்கு ஏற்பட்ட அரிய வகை நோய், அவரது வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப்போட்டது.

'கல்லைப் போல் இறுகும் உடல்'-அரிய வகை நோயால் அவதிப்படும் பெண்

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு பணிப்பெண் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சியடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையிலிருந்து பணிப்பெண் வேலைக்கு செல்வோர் எண்ணிக்கை வீழ்ச்சி?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்